கோபத்தில் பேசிய வார்த்தை.. கணவனை கதற கதற.. மர்ம உறுப்பையே இல்லாமல் செய்த 2வது மனைவி
டெல்லி: உத்தரபிரதேச மாநிலம் அமேதி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த அன்சார் அகமது என்பவருக்கு இரண்டு திருமணம் ஆகி உள்ளது. ஆனால் குழந்தைகள் இல்லை.. இரண்டு திருமணம் ஆகியும் குழந்தை இல்லாததால் அடிக்கடி மனைவிகளுடன் சண்டை போட்டு வந்தாராம். இதில் அவரது இரண்டாவது மனைவி ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தார். கணவருடன் ஏற்பட்ட தகராறில் அவரது மர்ம உறுப்பிலேயே மனைவி செய்த காரியம் ஆடிப்போக வைத்துள்ளது.
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக பெரியவர்கள் கூறுவார்கள். இன்னாருக்கு இன்னார் என்று இறைவன் எழுதி வைத்திருப்பதாகவும் கூறுவார்கள். ஆனால் சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் அதிருப்தி ஏற்பட்டு இரண்டாம் திருமணம் செய்வது நடக்கும். சிலர் முறைப்படி விவாகரத்து செய்துவிட்டு இரண்டாம் திருமணம் செய்வார்கள்.

ஆனால் சிலர் தங்கள் மத வழக்கப்படி இரண்டாவது திருமணம் செய்து கொள்வதும் இருக்கிறது. ஆனால் எத்தனை திருமணம் செய்தாலும் திருமண உறவு இனிமையாக இல்லாமல் போனால் வாழ்க்கையே நரகமாகும் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம் ஆகும்.
உத்தரபிரதேச மாநிலம் அமேதியை அடுத்து உள்ளது ஜகதீஷ்பூர். இந்த ஊருக்கு அருகே உள்ள குக்கிராமம் பசன்கஞ்ச் கச்னாவ். இந்த கிராமத்தில் 38 வயதாகும் அன்சார் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவருடைய முதல் மனைவியின் பெயர் சபேஜூல். இவருடைய இரண்டாவது மனைவியின் பெயர் நஸ்னீன் பானு. இரண்டு திருமணமாகியும் குழந்தை இல்லை.. இதனால் அன்சார் அகமது, தனது மனைவிகளிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாராம். குறிப்பாக தனது இரண்டாவது மனைவி நஸ்னீன் பானுவுடன் அடிக்கடி சண்டைபோட்டு வந்தார் அன்சார் அகமது.
நேற்று முன்தினம் இரவு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து, கடும் கோபம் அடைந்த நஸ்னீன் பானு, கணவரின் மர்ம உறுப்பை கதற கதற கத்தியால் துண்டித்திருக்கிறார். இது எப்படி நடந்தது என்பது குறித்து தெரியவரவில்லை..
இதில் படுகாயம் அடைந்த அன்சார் அகமதுவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு ஜகதீஷ்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ரேபரேலியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் நஸ்னீன் பானுவை போலீசார் நேற்று கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications