உத்தர பிரதேசத்தில் மீண்டும் யோகி ஆட்சி.. பாஜகவிற்கு மாபெரும் பெரும்பான்மை.. MATRIZE எக்ஸிட் போல்
டெல்லி: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக 266-277 இடங்கள் வரை பெற்று வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக MATRIZE எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன.
உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக இந்த முறை தேர்தல் நடைபெற்றது. பிப்ரவரி 10ம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ம் தேதி வரை நடைபெற்றது.
403 தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இங்கு மெஜாரிட்டி பெற 202 தொகுதிகளில் வெல்ல வேண்டும்.

உத்தர பிரதேசம்
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக, அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ், பிரியங்கா காந்தியை முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்த தேர்தலில் களம் கண்டன. 7 கட்ட தேர்தல் என்பதால் தேர்தல் களம் கடந்த ஒரு மாதமாக இங்கு விறுவிறுப்பாக இருந்தது.

கணிப்பு முடிவுகள்
இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளை MATRIZE நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் கணிப்பின் பாஜக 262 - 277 இடங்கள் வெல்லும் என்று MATRIZE நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமாஜ்வாதி 119 - 134 இடங்கள் வெல்லும் என்று MATRIZE நிறுவனம் தெரிவித்துள்ளது.

பகுஜன் சமாஜ்
அதேபோல் பகுஜன் சமாஜ் 07 - 15 இடங்கள் மட்டுமே வெல்லும் என்று MATRIZE நிறுவனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் 04 இடங்கள் மட்டுமே வெல்லும் என்று MATRIZE நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பாஜக பெரும்பான்மை பெற்று வெற்றிபெறும் என்று MATRIZE நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்பார்ப்பு
உத்தர பிரதேசத்தில் மொத்தம் 403 இடங்கள் உள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக 303 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது. அங்கு பாஜக கூட்டணிக்கு அப்னா தளம் கட்சியின் 9 இடங்களையும் சேர்த்து 312 இடங்கள் உள்ளன. எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சிக்கு 49 இடங்கள் உள்ளன. பகுஜன் சமாஜ் பார்ட்டிக்கு 15 இடங்கள் உள்ளன.












Click it and Unblock the Notifications