உத்தர பிரதேசத்தை தட்டி தூக்கும் பாஜக.. மீண்டும் அரியணை ஏறும் யோகி.. நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல்
டெல்லி: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக 211-225 இடங்கள் வரை பெற்று வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன.
இதன் மூலம் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றிபெறும் நியூஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக இந்த முறை தேர்தல் நடைபெற்றது. பிப்ரவரி 10ம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ம் தேதி வரை நடைபெற்றது.

உத்தர பிரதேசம்
மிகப்பெரிய திருவிழாவாக இங்கு தேர்தல் நடைபெற்றது. இன்றுதான் கடைசி கட்ட தேர்தல் நடைபெற்றது. 403 தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இங்கு மெஜாரிட்டி பெற 202 தொகுதிகளில் வெல்ல வேண்டும்.

எக்ஸிட் போல் முடிவுகள்
உ.பி தேர்தல் தொடர்பாக நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல் முடிவுகளின்படி பாஜக 211-225 இடங்கள் வரை வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. அங்கு பெரும்பான்மை பெற 202 இடங்கள் மட்டுமே தேவை. இதன் மூலம் பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்று நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல் தெரிவித்துள்ளது.

மற்ற கட்சிகள்
சமாஜ்வாதி 146-160 இடங்கள் கிடைக்கும் என்று நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல் தெரிவித்துள்ளது.
பகுஜன் சமாஜ் 14-24 இடங்கள் கிடைக்கும் என்று நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் 4-6 இடங்கள் கிடைக்கும் என்று நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல் தெரிவித்துள்ளது.

முந்தைய வரலாறு
உத்தர பிரதேசத்தில் மொத்தம் 403 இடங்கள் உள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக 303 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது. அங்கு யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக கட்சி ஆட்சி புரிந்து வருகிறது. அங்கு பாஜக கூட்டணிக்கு அப்னா தளம் கட்சியின் 9 இடங்களையும் சேர்த்து 312 இடங்கள் உள்ளன. எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சிக்கு 49 இடங்கள் உள்ளன. பகுஜன் சமாஜ் பார்ட்டிக்கு 15 இடங்கள் உள்ளன.
காங்கிரஸ் கட்சிக்கு 7 இடங்கள் உள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications