அப்போ சமாஜ்வாதிக்கு சான்ஸே இல்லையா! உ.பியில் மீண்டும் பாஜக ஆட்சிதான்.. டைம்ஸ் நவ் பரபர கணிப்பு
டெல்லி: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக 225 இடங்கள் வரை பெற்று வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக டைம்ஸ் நவ் வீட்டோ எக்சிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன.
உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்கள் ஒருவழியாக நடந்து முடிந்துள்ளன. இன்று மாலை 6 மணிக்கு சரியாக 7ம் கட்ட வாக்கு பதிவு முடிந்தது.
முழுமையாக வாக்கு பதிவு சதவிகிதம் சற்று நேரத்தில் தேர்தல் ஆணையம் மூலம் வெளியிடப்படும். இந்த நிலையில் தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.

யாருக்கு வெற்றி
உத்தர பிரதேசத்தில் மொத்தம் 403 இடங்கள் உள்ளன. உத்தர பிரதேசத்தில் பெரும்பான்மைக்கு 202 இடங்களில் வெற்றிபெற வேண்டும். இந்த நிலையில் டைம்ஸ் நவ் - வீட்டோ எக்சிட் போல் வெளியிட்டுள்ள கணிப்பில் அங்கு முதல் கட்ட தேர்தலில் 58 இடங்களில் பாஜக 31 இடங்களையும், பகுஜன் சமாஜ் 23 இடங்களையும் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் பகுஜன் சமாஜ் 1, காங்கிரஸ் 2, மற்றவர்கள் 1 ஆகிய இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலில் 55 இடங்களில் பாஜக 31 இடங்களில், சமாஜ்வாதி 20, பகுஜன் சமாஜ் 2, காங்கிரஸ் 2 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கட்டங்கள் ரீதியாக
மூன்றாம் கட்ட தேர்தலில் இடங்களில் பாஜக 32 இடங்களிலும், சமாஜ்வாதி 23 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 1 இடத்திலும், காங்கிரஸ் 2 இடத்திலும், மற்ற கட்சிகள் 1 இடத்திலும் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நான்காம் கட்ட தேர்தலில் இடங்களில் பாஜக 38 இடங்களிலும், சமாஜ்வாதி 18 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 1 இடத்திலும், காங்கிரஸ் 2 இடத்திலும், மற்ற கட்சிகள் 1 இடத்திலும் வெல்லும் என்று கணிக்கப்ப்டுள்ளது. 5ம் கட்ட தேர்தலில் இடங்களில் பாஜக 38 இடங்களிலும், சமாஜ்வாதி 20 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 1 இடத்திலும், காங்கிரஸ் 1 இடத்திலும் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் எத்தனை
மொத்தமாக உத்தர பிரதேசத்தில் 403 இடங்களில் பாஜக 225 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.. சமாஜ்வாதி 151 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் 14 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் 9 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 4 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக இந்த முறை தேர்தல் நடைபெற்றது. பிப்ரவரி 10ம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ம் தேதி வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் எப்படி
அங்கு யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக கட்சி ஆட்சி புரிந்து வருகிறது. மீண்டும் அங்கு ஆதித்யநாத் முன்னிறுத்தப்பட்டு பாஜக தேர்தலை சந்தித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் மொத்தம் 403 இடங்கள் உள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக 303 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது. அங்கு பாஜக கூட்டணியில் இருந்த அப்னா தளம் கட்சியின் 9 இடங்களையும் சேர்த்து 312 இடங்கள் வென்றது. எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சிக்கு 49 இடங்களை வென்றது. பகுஜன் சமாஜ் பார்ட்டி 15 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கட்சி 7 இடங்களில் வென்றது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications