கல்யாணம் முடிந்த 15 நாளில் கணவனுக்கு காரியமே செய்த பிரகதி.. தடுமாறிய வார்த்தைகளால் சிக்கியது எப்படி?
டெல்லி: உத்தரபிரதேச மாநிலம் அவுரியா மாவட்டம் சஹார் பகுதியை சேர்ந்த திலீப் யாதவ் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரகதி யாதவ் என்ற பெண்ணுக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் திருமணம் முடிந்த 15வது நாளிலேயே இளம் பெண் பிரகதி தனது சுயரூபத்தை காட்டியுள்ளார். கூலிப்படை வைத்து கணவனுக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் காதலனுடன் தற்போது கைதாகி உள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அவுரியா மாவட்டம் சஹார் பகுதியை சேர்ந்த திலீப் யாதவ் என்பவருக்கு திருமணம் நடத்த பெற்றோர் முடிவு செய்தனர். இதன்படி திலீப் யாதவுக்கு அதே பகுதியை சேர்ந்த பிரகதி யாதவ் (வயது 22) என்ற பெண்ணை கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர்.

இந்தநிலையில் கடந்த மார்ச் 19-ந் தேதி சஹார் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் திலீப் யாதவ் படுகாயங்களுடன் கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று, திலீப் குமார் யாதவை மீட்டு. பிதுனாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.திலீப்குமார் யாதவை தாக்கியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சைபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், திலீப் குமாரை அவருடைய குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி திலீப் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக அவருடைய மனைவி பிரகதியிடம் போலீசார் விசாரித்த போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால், போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் திரும்பியது.
பின்னர் போலீசார், தங்கள் பாணியில் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். இதில் பிரகதி உண்மையை ஒப்புக்கொண்டார். பிரகதி, அனுராக் என்கிற மனோஜை திருமணத்துக்கு முன்பே காதலித்து வந்துள்ளார். அவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், பிரகதியை திலீப்குமார் யாதவுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். இதனால் தனது கணவரை தீர்த்துக்கட்ட காதலனுடன் பிரகதி திட்டம் தீட்டினார். அதன்படி கூலிப்படையை சேர்ந்த ராம்ஜி சவுத்ரிக்கு ரூ.2 லட்சம் கொடுத்து திலீப்குமாரை தீர்த்துக்கட்டுமாறு தெரிவித்தாராம்.
இதன்படி அவரும் கடந்த 19-ந்தேதி திலீப்குமாரை, உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு வயல்வெளியில் போட்டு சென்று விட்டார் என்ற விவரம் வெளியாகி உள்ளது. இதை உறுதி செய்ய சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் பிரகதி, அவருடைய காதலர் அனுராக், கூலிப்படையை சேர்ந்த ராம்ஜி சவுத்ரி ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருமணம் ஆன 15 நாளில் கணவனை மனைவி கூலிப்படை ஏவி கொலை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications