லோக்சபா தேர்தல்: காங். கூட்டணிக்கு 272 இடம் கிடைக்கும்.. பாஜக தோற்கும்.. மூட் ஆப் தி நேஷன் சர்வே
டெல்லி: லோக்சபாவுக்கு நாளை தேர்தல் நடப்பதாக இருந்தால் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 272 இடங்கள் கிடைக்கும். பாஜகவுக்கு 2வது இடமே கிடைக்கும் என்று இந்தியா டுடே கார்வி இன்சைட்ஸ் மூட் ஆப் தி நேஷன் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
இந்தியா டுடே கார்வி இன்சைட்ஸ் மூட் ஆப் தி நேஷன் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இன்று சில முடிவுளை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

- அதிமுக, ஒய்எஸ்ஆர் காங். வந்தாலும் பாஜகவுக்கு லாபம் கிடைக்காது
- நாடாளுமன்றத்துக்கு நாளை தேர்தல் நடந்தால் எதிர்க்கட்சி கூட்டணிக்கு 272 இடங்கள் கிடைக்கும்
- 44 சதவீத வாக்குகளை எதிர்க்கட்சி கூட்டணி பெறும் - மூட் ஆப் தி நேஷன் கருத்துக் கணிப்பு
- பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 40 சதவீத வாக்குகள் கிடைக்கும்
Is India heading towards a fractured mandate? Here are the big numbers. #MoodOfTheNation @rajchengappa @sardesairajdeep
— India Today (@IndiaToday) January 24, 2019
Live https://t.co/4fqxBVUizL pic.twitter.com/dj33ne22LY
வரும் தேர்தலில் மமதா பானர்ஜி, மாயாவதி, மெகபூபா முக்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் இணைந்து வந்தால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வரும் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியமைக்கும்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவும், ஒய்எஸ்ஆர் ஜெகன் மோகன் ரெட்டியும் பாஜகவுக்கு ஆதரவு அளித்தாலும் கூட தேசிய முற்போக்குக் கூட்டணியின் சரிவைத் தவிர்க்க முடியாது. இவர்கள் இணைந்தாலும் கூட தேசிய ஜனநாயகக் கூட்ணிக்கு 234 இடங்களே கிடைக்கும்.
கடந்த லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 336 இடங்கள் கிடைத்தன. ஆனால் இந்த முறை படு வீழ்ச்சியை கூட்டணி சந்திக்கவுள்ளது. கடந்த தேர்தலுக்குப் பிறகு தெலுங்கு தேசம், உபேந்திர குஷ்வாஹாவின் ஆர்எல்எஸ்பி போன்ற முக்கிய கூட்டாளிகளை பாஜக இழந்துள்ளதே இதற்கு முக்கியக் காரணம்.
இந்தஇருவரைத் தவிர மற்றவர்கள் மற்றும் பிற கட்சிகளுக்கு மொத்தமாக 37 இடங்கள் கிடைக்கும். இவர்களை பாஜக கவர்ந்திழுத்தால் ஆட்சியமைக்கும் வாய்ப்பு கை கூடி வரும். எனவே 3வது இடத்தைப் பிடிப்பவர்களுக்கு முக்கியத்துவம் பிரகாசமாக உள்ளது.
லோக்சபாவில் மொத்தம் 545 இடங்கள் உள்ளன. இதில் பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கை 272 ஆகும்.
-
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications