கூகுள் பே, போன் பே, பேடிஎம் யூஸ் பண்றீங்களா.. நீங்கள் அறிய வேண்டிய முக்கியமான விஷயம்.. என்பிசிஐ விளக்கம்
டெல்லி: வாடிக்கையாளர்களின் யுபிஐ பணப்பரிமாற்றங்களுக்கு கட்டணம் இல்லை என என்.பி.சி.ஐ. விளக்கம் அளித்துள்ளது. அப்படி என்றால் யாருக்கு தான் கட்டணம், என்பிசிஐ இன் விளக்கம் என்ன, கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப் வைத்திருப்பவர்கள் அறிய வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை இந்த கட்டுரையில் தெளிவாக பார்ப்போம்.
Recommended Video
கூகுள் பே, போன்பே,அமேசான் பே, பேடிஎம் போன்ற யு.பி.ஐ. செயலிகள் மூலம் நடைபெறும் பணப்பரிமாற்றங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய கட்டண கழகம் சுற்றறிக்கை வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி இருந்தது.
அந்த சுற்றறிக்கையின் படி, ரூ.2 ஆயிரத்துக்கு மேல் நடைபெறும் பணப்பரிவர்த்தனை பரிமாற்றங்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. குக்கிராமங்களில் கூட இன்று ஜிபேவும் பேடிஎம்மும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் என்ற தகவல் மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

கடும் அதிருப்தி
ஏனெனில் இன்றைய சூழலில் மக்கள் ரொக்க பயன்பாட்டை பெரும்பாலும் மறந்தே விட்டனர். சில்லறை இல்லை ஜிபே பண்ணுங்க என்று சொல்லும் அளவிற்கு காய்கறி கடைகளில் கூட நிலை உள்ளது. இதனால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து சமூக வலைதளங்களில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

யுபிஐ
இந்நிலையில் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் நடைபெறும் பணப்பரிவர்த்தனை பரிமாற்றங்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் என்ற தகவலுக்கு தேசிய கட்டண கழகம் (என்.பி.சி.ஐ.) விளக்கம் அளித்து உள்ளது. வாடிக்கையாளர்கள் வங்கி கணக்குகளுக்கு இடையே மேற்கொள்ளப்படும் யு.பி.ஐ. பரிமாற்றங்களுக்கு கட்டணம் இல்லை என கூறியுள்ளது.

யாருக்குத்தான் கட்டணம்
பி.பி.ஐ எனப்படும் பிரீப்பெய்டு பேமென்ட் கருவியைக் கொண்டு, ரூ.2,000-க்கு மேல் வணிகர்கள் மேற்கொள்ளும் பரிமாற்றத்துக்குதான் ஏப்ரல் 1-ந் தேதி முதல் 1.1 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை எனவும் என்.பி.சி.ஐ. பொதுமக்களுக்கு விளக்கம் அளித்திருக்கிறது.

செலவுகள்
ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் வாலட்டை வைத்திருக்கும் வாடிக்கையாளர் மற்றொரு நிறுவனத்தின் வாலட்டை வைத்திருக்கும் வணிகருக்கு பணம் செலுத்தும்போது. ஒன்றோடொன்று இயங்கக்கூடிய செலவுகளை ஈடுகட்ட இந்த வரி அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாபாரிகள்
வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. யுபிஐ பரிவர்த்தனைகளில் 99.9 சதவீதம் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருப்பதால், தனிநபர்-தனிநபர், தனிநபர்-வர்த்தகர், வங்கி-வங்கி கணக்கு பரிமாற்றம் உள்ளிட்ட சாதாரண யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் பரிமாற்றக் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. போன்பே, கூகுள் பே செயலியில் யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் இந்த வகை பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை என அறிவித்துள்ளது.

விளக்கம்
முன்னதாக பேடிஎம் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், வங்கிக்கணக்கு அல்லது பி.பி.ஐ., வாலட்டில் இருந்து பணம் செலுத்துவதற்கு எந்த வாடிக்கையாளரும் கட்டணம் செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications