லோக்சபா தேர்தல் எதிரொலி.. யுபிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைப்பு.. புதிய தேதி என்ன! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டெல்லி: லோக்சபா தேர்தல் நமது நாட்டில் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், தேர்தல் காரணமாக யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே லோக்சபா தேர்தலையொட்டி யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 26ஆம் தேதி யுபிஎஸ்சி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 16ஆம் தேதி யுபிஎஸ்சி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் காரணமாக இந்த யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து யுபிஎஸ்சி நிர்வாகம் தனது இணையத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிவில் சர்வீசஸ் பிரிலிம்ஸ் தேர்வு மே 26இல் நடைபெற இருந்த நிலையில், அது இப்போது ஜூன் 16இல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், "லோக்சபா தேர்தல் அட்டவணை காரணமாக, 2024 ஆம் ஆண்டுக்கான இந்திய சிவில் சர்வீஸ் தேர்வு மே 26ஆம் தேதிக்குப் பதிலாக ஜூன் 16ஆம் தேதி ஒத்திவைக்க யுபிஎஸ்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு என்பது இந்தியாவின் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் ஆக ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர். இந்த ஆண்டு, யுபிஎஸ்சி தேர்வுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி வெளியிடப்பட்டது. கடந்த முறை, கொரோனா காரணமாக இதற்கு முன்பு கடந்த 2020இல் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு யுபிஎஸ்சி தேர்வு மீண்டும் ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தல் வரும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் நிலையில், 2ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதியும், 3ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 7ஆம் தேதியும் நடைபெறுகிறது. 4ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 13இல் நடக்கிறது., 5ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 13ஆம் தேதியும் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 25ஆம் தேதியும் நடக்கிறது.
கடைசிக் கட்ட தேர்தல் மட்டும் வரும் ஜூன் 1ஆம் தேதி நடக்கும் நிலையில், வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்












Click it and Unblock the Notifications