யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.. ரிசல்ட் பார்ப்பது எப்படி?
டெல்லி: சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது யுபிஎஸ்சி. தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் தங்கள் முடிவுகளை upsc.gov.in இணையதளத்தில் பார்க்கலாம்.
2024 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு ஜூன் 16 ஆம் தேதி நடைபெற்றது. 1,056 சிவில் சர்வீஸ் மற்றும் 150 இந்திய வனத்துறை சேவை பணிகளுக்கு நாடு முழுவதும் முதல்நிலை தேர்வு ஜூன் 16 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் போன்ற 24 வகையான குடிமைப் பணிகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு, முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் என மூன்று கட்டமாக நடத்தப்படும்.
இந்த ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் 16 ஆம் தேதி 2 தாள்கள் கொண்டு 400 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. இதில் நாடு முழுவதும் 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்விற்கான முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது மத்திய பணியாளர் தேர்வாணையம். தேர்வு முடிவுகளை https://upsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் தெரிந்துகொள்ளலாம்.
இதில் தேர்வானவர்கள் முதன்மை தேர்வுக்கு தயாராகலாம். யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மை தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். முதன்மை தேர்வு வரும் செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெற உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications