இதான் சூட்சமம்.. யுபிஎஸ்சி தேர்வில் வெல்வது எப்படி? 11 மணி நேர டைம் டேபிளை வெளியிட்ட ஐஏஎஸ் டினா
டெல்லி: யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்த ஐஏஎஸ் அதிகாரி டினா தாபி, வெற்றிக்கான ரகசியமாக அமைந்த 11 மணி நேர பயிற்சி அட்டவணையை வெளியிட்டு உள்ளார்.
மத்திய அரசு பணிகளிலேயே மிக உயர் பதவிகளாக ஐஏஎஸ், ஐ.எஃப்.எஸ். மற்றும் ஐபிஎஸ் ஆகியவை உள்ளன. அரசு நிர்வாகத் துறையில் ஐஏஎஸ் அதிகாரிகளும், காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரிகளும், வெளியுறவுத் துறை ஐ.எஃப்.எஸ் அதிகாரிகளுமே உயரிய பதவிகளை அலங்கரிப்பார்கள். இந்த உயர் பதவிகளை பெற யுபிஎஸ்சி எனப்படும் இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்து வெற்றிபெற வேண்டும்.

ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த யுபிஎஸ்சி தேர்வில் முதல் நிலை தேர்வுகள், முதன்மை தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகள் என 3 விதமான படிநிலைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த தேர்வில் வெற்றிபெற லட்சக்கணக்கான பட்டதாரிகள் தனியாகவும், பயிற்சி மையங்களிலும் பயிற்சி பெற்று வருகிறார்கள். இதற்கு தினமும் பல மணி நேரங்களை அவர்கள் செலவிடுகின்றனர். இருப்பினும், அனைவரது முயற்சிகளுக்கும் வெற்றி கிடைப்பதில்லை. ஆனால், முறையான திட்டமிடலுடன், முழு மனதுடன் பயிற்சி எடுத்தால் தேர்வில் வெற்றிபெறலாம்.
அந்த வகையில் யுபிஎஸ்சி தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக உயர்ந்தவர் டினா தாபி. இவர் தன்னால் எப்படி யுபிஎஸ்சி தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற முடிந்தது என்ற ரகசியத்தை வெளியிட்டு உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. ஒரு நாளில் 11 மணி நேரம் அவர் படித்ததற்கான அட்டவணை என கையால் எழுதப்பட்ட ஒரு புகைப்படத்தை ஊடகங்கள் பகிர்ந்து இருக்கின்றன.
அதில், "காலை 7 மணிக்கு விழிக்க வேண்டும். 7.30 மணிக்கு செய்தித்தாள் வாசிப்பு. 8 மணிக்கு காலை உணவு. காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை 3 மணி நேரம் படிக்க வேண்டும். 12 மணி முதல் மதியம் 1 மணி வரை நடப்பு நிகழ்வுகளை ஒரு மணி நேரம் அலச வேண்டும். 1 மணி முதல் 2 மணி வரை மதிய உணவு இடைவேளை. 2 மணி முதல் 3 மணி வரை ஓய்வு நேரம். 3 மணி முதல் 5 மணி வரை 2 மணி நேரம் படிப்பதற்கான நேரம். மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை படித்த பாடங்களை ரிவிசன் செய்ய வேண்டும். 8 மணி முதல் இரவு 9 மணி வரை இரவு உணவு இடைவேளை. 9 மணி முதல் 11 வரை மீண்டும் படிப்பதற்கான நேரம். இரவு 11 மணி முதல் 12 மணி வரை சமூக வலைதளங்களை பயன்படுத்திவிட்டு உறங்க செல்ல வேண்டும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications