கதறும் அமெரிக்கா.. புதினை சந்திப்புக்கு முன் மோடிக்கு, டிரம்ப் டீம் அனுப்பிய மெசேஜ்! கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: டிரம்பின் வரி விதிப்பால் அமெரிக்காவுக்கும், நம் நாட்டுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் நம் நாடு சீனாவுடன் கைகோர்த்துள்ளது. சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார். இது அமெரிக்காவின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. இந்நிலையில் நேற்று புதினை, பிரதமர் மோடி சந்திக்கும் முன்பு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அனுப்பிய மெசேஜ் என்பது இந்தியா - சீனா - ரஷ்யா உறவை பார்த்து அஞ்சியதை காட்டும் வகையில் உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை விதித்துள்ளார். இதனால் நட்பாக இருந்த அமெரிக்கா நமக்கு பகையாளியாக மாறி உள்ளது. டொனால்ட் டிரம்ப், அவரது ஆலோசகர்கள் நம் நாட்டின் பொருளாதாரத்தை தரக்குறைவாக பேசி வருவதோடு, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை விமர்சனம் செய்து வருகின்றனர்.

us-and-india-partnership-continues-to-reach-new-heights-says-marco-rubio-when-minutes-before-modi-p

இதனால் நம் நாடு - அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தான் நேற்று முன்தினம், நேற்று என 2 நாட்கள் சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடந்தது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் மோடி பங்கேற்றனர்.

புதின் - மோடி சந்திப்பு

பிரதமர் மோடி, ஜி ஜின்பிங் மற்றும் விளாடிமிர் புதின் ஆகியோருடன் தனித்தனியே பேசினார். முதலில் ஜி ஜின்பிங் உடன் இருதரப்பு உறவுகள் பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது எல்லை பிரச்சனைக்கு தீர்வு காண்பது, பரஸ்பரமாக இருநாடுகளும் சேர்ந்து செயல்படுவது பற்றி முடிவெடுக்கப்பட்டது.

அதன்பிறகு நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் பிரதமர் மோடி சந்தித்தார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி நமக்கு வரி விதித்த அமெரிக்காவின் தலையில் இது இடியை இறக்கியது. அதுமட்டுமின்றி ரஷ்யா - இந்தியா நட்பை பிரிக்க முடியாது என்ற மெசேஜை பிரதமர் மோடி, டிரம்புக்கு அனுப்பினார். இது அமெரிக்காவை டென்ஷனாக்கி உள்ளது.

அமெரிக்காவுக்கு வந்த பயம்

ஏனென்றால் ரஷ்யா, சீனா ஏற்கனவே அமெரிக்காவுக்கு எதிரியாக உள்ள நிலையில் இந்தியாவுடன் அமெரிக்காவை கைக்கழுவுவதை அவர்கள் விரும்பவில்லை. அதோடு சீனாவை அடக்க இந்தியாவின் உறவு முக்கியத்தும் என்று அமெரிக்கா நினைக்கிறது.

இதனால் நேற்றைய தினம் புதின் - மோடி சந்திப்புக்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை மெசேஜ் அனுப்பியது. இந்த மெசேஜ் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக அமெரிக்காவுக்கான இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது:

மோடிக்கு அனுப்பிய மெசேஜ்

‛‛அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான கூட்டாண்மை தொடர்ந்து புதிய உயரங்களை எட்டுகிறது. இது 21 ஆம் நூற்றாண்டின் வரையறுக்கும் வகையிலான உறவாகும். இந்த மாதம் மக்கள், முன்னேற்றம் மற்றும் நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்லும் சாத்தியக்கூறுகளை முன்னிலைப்படுத்தி செயல்பட உள்ளோம்.

எங்கள் இருதரப்பு மக்களுக்கும் இடையேயான நீடித்த நட்பு என்பது புதுமையான விஷயங்கள், தொழில் முதல் பாதுகாப்பு மற்றும் இருதரப்பு இடையேயான உறவுகள் வரையிலான பயணத்தை தொடர்ந்து முன்னெடுக்க தூண்டுகிறது'' என்றார். மேலும் அந்த பதிவை அமெரிக்க வெளியுறவுத்துறை #USIndiaFWDforOurPeople என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு இருந்தது. இதன் அர்த்தம் என்பது அமெரிக்காவும், இந்தியாவும் தங்களின் மக்களின் நலனுக்காக இருதரப்பு உறவை முன்னேற்றி கொண்டு செல்லும் என்பதாகும்.

ரூபியோவின் மெசேஜ் பின்னணி

ஆனால் தற்போதைய சூழலில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவில் கடும் விரிசல் விழுந்துள்ளது. டிரம்ப் விதித்த வரியை நியாயமற்றது என்று நம் நாடு கூறிய நிலையில் இந்தியாவின் நலனுக்கான பணியை மேற்கொள்வோம் என்று அறிவித்துள்ளது. மாறாக அமெரிக்கா நம் நாட்டை தொடர்ந்து மிரட்டி வருகிறது. எப்படியாவது மிரட்டி அடிபணிய வைத்து விட வேண்டும் என்று அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.

இப்படியான சூழலில் தான் ஜி ஜின்பிங் சந்திப்பை தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதின் உடனான மோடியின் சந்திப்புக்கு முன்பாக மார்கோ ரூபியோ கூறியதாக இந்திய வெளியுறவுத்துறை இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் சீனா, ரஷ்யாவுடன் சேர வேண்டாம். நாம் இணைவரும் மீண்டும் சேர்ந்து இருநாடுகளின் மக்களுக்காக செயல்படலாம் என்பதை மார்கோ ரூபியோ மெசேஜாக அனுப்பி உள்ளார் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் எந்த காரணம் கொண்டும் இந்தியா, ரஷ்யாவின் உறவை அமெரிக்காவுக்காக கைவிடாது என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+