டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லடாக் எல்லையில் சீனாவின் அதிகரிக்கும் உள் கட்டமைப்புகள்- இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் லடாக் எல்லையில் சீனாவின் அதிகரிக்கும் உள்கட்டமைப்புகள் குறித்து இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் லடாக் எல்லையில் சீனா ஊடுருவி இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதால் இருநாடுகளிடையே யுத்த பதற்றம் ஏற்பட்டது. இந்த பதற்றத்தைத் தணிக்க கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

US General warns India on Chinese BuildUp Near Ladakh

இப்பேச்சுவார்த்தைகளில் எல்லைகளில் படைவிலக்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டிருக்கின்றன. இப்பேச்சுவார்த்தைகளால் சில முன்னேற்றங்கள் ஏற்பட்ட போதும் இறுதித் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. இப்பேச்சுவார்த்தைகள் அடுத்தடுத்து நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் லடாக் எல்லையில் சீனாவின் செயல்பாடுகள் குறித்து அமெரிக்க ராணுவத்தின் பிசிபிக் பிராந்திய தளபதி Gneral Charles A Flynn எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், மேற்கு முன்னரங்க பகுதியில் சீனாவின் உள்கட்டமைப்புகள் எச்சரிக்கைக்குரியவையாக இருக்கின்றன. சீனாவின் இத்தகைய நடவடிக்கைகள் குறித்து இந்தியா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்தியாவும் அமெரிக்காவும் சீனாவின் இப்போக்குகளுக்கு இணைந்து பதிலடி தரவேண்டும் என்றார்.

Recommended Video

    Al Queda Warning To India | தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்படும் | Nupur Sharma | Prophet Muhammad

    இந்தியா சீனா நடைபெறப் போகும் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை மிக முக்கியமானதாக இருக்கும் என்பது பாதுகாப்பு வல்லுநர்கள் கருத்து. இந்த நிலையில் அமெரிக்காவின் இந்த எச்சரிக்கை இருதரப்புப் பேச்சுவார்த்தையில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது.

    English summary
    US General Charles A. Flynn has warned India on Chinese BuildUp Near Ladakh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X