அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இந்தியா வருகை.. இன்று நடக்கும் முக்கிய பேச்சுவார்த்தை
டெல்லி: இந்தியா- அமெரிக்கா இடையேயான 2+2 பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் இந்தியா வருகை தந்துள்ளார். இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.
கடந்த 2018- ஆம் ஆண்டு முதல் இந்தியா - அமெரிக்கா இடையே 2+2 பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளையும் சேர்ந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கன் இந்தியா வருகை தந்தார். டெல்லி விமான நிலையம் வந்த ஆண்டனி பிளின்கனை வெளியுறவுத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். இந்தியா - அமெரிக்கா இடையே இன்று நடைபெறும் '2+2' பேச்சுவாா்த்தையில் இந்தியா சார்பில் ராஜ்நாத்சிங் மற்றும் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்கள்.
அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சரும் இந்தியா வருகை தந்துள்ளார். முன்னதாக இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், "இந்தியா அமெரிக்கா இடையேயான 2+2 பேச்சுவார்த்தையில் போது பிராந்திய அளவிலான பிரச்சினைகள், குவாட் போன்ற அமைப்புகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது ஆகியவை குறித்து இருநாட்டு அமைச்சர்களும் ஆலோசிக்க உள்ளனர்.
அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் வெளியுறவு அமைச்சர் அண்டனி பிளின்கனுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தனித்தனியே ஆலோசனை நடத்துவார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு












Click it and Unblock the Notifications