இருநாடுகளுக்குமான உறவு முக்கியம்.. இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ
Recommended Video
டெல்லி: அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரான மைக் பாம்பியோ இம்மாதம் இந்தியா வரவுள்ளார். அப்போது இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்படும் என கூறப்படுகிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரான மைக் பாம்பியோ வரும் ஜூன் 24 ஆம் தேதி இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் ஒரு வாரம் பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது மைக் பாம்பியோ ஜப்பான் மற்றும் இலங்கை நாடுகளுக்கும் செல்லவுள்ளார்.

இந்த பயணத்தின் தொடக்கமாக முதலில் டெல்லி வருகிறார் மைக் பாம்பியோ. இதேபோல் இந்த பயணத்தின் இருதியாக மைக் பாம்பியோ தென் கொரியா செல்கிறார்.
தனது பயணத்தைத் தொடங்கும் முன்பு, மைக் பாம்பியோ ஜூன் 12 ஆம் தேதி அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சிலின் இந்தியா ஐடியாஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்று பாம்பியோ உரையாற்றவுள்ளார்.
இந்தியாவுக்கு வரும் முன்னதாக இந்திய தொழிலதிபர்கள் மத்தியில் உரையாற்றுவது இந்திய பயணத்துக்கு பயன் உள்ளதாக இருக்கும் என மைக் பாம்பியோ கூறியுள்ளார். பொருளாதார ரீதியாக இவ்விரு நாடுகளும் நெருக்கமாக இந்த பயணம் வாய்ப்பாக இருக்கும் என்றும் மைக் பாம்பியோ கூறியுள்ளார்.
முக்கியமாக அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு நம்பமுடியாத உறவை மேற்கொள்ளும் இந்த இருநாடுகளின் உறவும் நம்ப முடியாத அளவுக்கு இருக்கும் என்றும் மைக் பாம்பியோ தெரிடவித்துள்ளார்.
இருநாடுகளின் உறவு எப்படி நெருக்கமாக உள்ளது என்பதைப் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் பாம்பியோ கூறியுள்ளார்.
இந்தியா வரும் மைக் பாம்பியோ பின்னர் இலங்கை புறப்படுகிறார். அங்கு அந்நாட்டு தலைவர்களுடன் ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆலோசனை நடத்தும் மைக் பாம்பியோ, அமெரிக்கா - இலங்கை இடையிலான உறவு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பின்னர் ஜூன் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் ஓசாகா மற்றும் ஜப்பான் செல்லும் பாம்பியோ ஜி-20 தலைவர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஜப்பான் அதிபருடனான ட்ரம்பின் சந்திப்பின் போது பாம்பியோ அவர்களுடன் இணைவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications