ஆர்எஸ்எஸ்க்கு தடை விதிக்க வேண்டும்.. அமெரிக்க ஆணையம் போடும் பிரஷர்.. கொதித்தெழுந்த மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆர்எஸ்எஸ் எனப்படும் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் உறுப்பினர்கள் மீது பொருளாதார மற்றும் தூதரகத் தடைகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் (USCIRF) பரிந்துரை செய்துள்ளது.

அமெரிக்காவின் இந்த ஆணையத்திற்கு இந்தியா மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளது. USCIRF அமைப்பு எப்போதும் ஒருதலைப்பட்சமாகச் செயல்படும் ஒரு பாரபட்சமான அமைப்பு என்றும், அதற்கு எந்தவிதமான நம்பகத்தன்மையும் இல்லை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

USCIRF Targets RSS

வெளியுறவு அமைச்சகத்தின் காட்டமான கருத்து

வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், தனது செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாகப் பேசினார். அப்போது USCIRF அமைப்பின் கருத்துகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்:

நீங்கள் குறிப்பிடும் USCIRF அமைப்பு ஒரு பாரபட்சமான அமைப்பு என்பது உலகத்துக்கே தெரியும். பல ஆண்டுகளாகவே இந்தியாவிற்கு எதிராகத் தவறான, உண்மைக்குப் புறம்பான மற்றும் தூண்டிவிடும் வகையிலான அறிக்கைகளை அது தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. உள்நோக்கத்தோடு செயல்படும் இது போன்ற அமைப்புகளுக்கு எந்த நம்பகத்தன்மையும் கிடையாது. எனவே, இவற்றைப் புறந்தள்ளிவிட்டு விலகி இருப்பதே சிறந்தது.

USCIRF முன்வைத்த சர்ச்சை குற்றச்சாட்டுகள்

சமீபத்தில் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அமெரிக்க சர்வதேச மத சுதந்திர ஆணையம், ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களுடன் அமெரிக்க அரசு உயர்மட்ட ஆலோசனைக் கூட்டங்களையோ தூதரக உறவுகளையோ வைத்துக்கொள்ள கூடாது என்றும், அவர்கள் மீது சர்வதேச அளவில் தடைகள் விதிக்க பரிசீலிக்க வேண்டும் என்றும் வாஷிங்டன் நிர்வாகத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த ஆணையத்தின் தலைவரான பாகிஸ்தானிய-அமெரிக்க மருத்துவர் ஆசிப் மஹ்மூத் மற்றும் ஆணையர் ஜீன் மில்ஸ் ஆகியோர் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்திருந்தனர். இந்தியாவில் ஆளும் பாஜகவின் கொள்கை வழிகாட்டியாக விளங்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கீழ் இயங்கும் பிரிவுகள் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுவதாக அவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மத சுதந்திரத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வாஷிங்டன் நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜீன் மில்ஸ் குறிப்பிட்டிருந்தார்.

மோகன் பகவத்தின் வெளிநாட்டுப் பயண பின்னணி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் விரிவான சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். வெளிநாடுகளில் இயங்கும் இந்திய வம்சாவளி அமைப்புகள் மற்றும் புலம்பெயர்ந்த இந்திய சமூகத்தினரின் அழைப்பை ஏற்று இந்த பயணம் நடைபெறுகிறது.

குறிப்பாக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் 100-வது ஆண்டு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் சூழலில் மோகன் பகவத்தின் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. அங்குள்ள இந்திய சமூகப் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் அமைப்புகளை அவர் சந்தித்துப் பேச உள்ளார். அவரது பயணம் தொடங்க சில நாட்களே உள்ள நிலையில், அமெரிக்க ஆணையம் திட்டமிட்டு இத்தகைய அறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க சர்வதேச மத சுதந்திர ஆணையம் இதுபோன்று பேசுவது முதல்முறையல்ல. கடந்த காலங்களிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேர்தல் நடைமுறைகள் குறித்து அறிக்கைகளை வெளியிட்டு வந்ததை இந்தியா தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆணையம் பரிந்துரைகளை மேற்கொண்டுள்ள போதிலும், அமெரிக்க அரசாங்கம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மீது எந்தவித நடவடிக்கையோ அல்லது கட்டுப்பாடுகளையோ விதிப்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+