181 சீட் கேட்ட ராகுல் காந்தி. "24 மட்டுமே தர முடியும்.." கட் அண்ட் ரைட்டாக பேசும் அகிலேஷ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2027 உத்தர பிரதேச சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸும் தயாராகி வரும் நிலையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இப்போதைக்கு முடியாது என்றே தெரிகிறது. காங்கிரஸ் முதலில் 180 சீட்களை கேட்ட நிலையில், சமாஜ்வாதி 24 இடங்களை மட்டுமே கொடுக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே பேச்சுவார்த்தை முடியும் என தெரிகிறது.

உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஒரு பக்கம் மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் முனைப்பில் பாஜக களமிறங்கியுள்ளது. இன்னொரு பக்கம் பாஜகவை வீழ்த்தியே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் அகிலேஷ்- காங்கிரஸ் கூட்டணி அமைத்து களமிறங்குகிறது. இருப்பினும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எதிர்க்கட்சி கூட்டணியில் இழுபறியாகவே இருக்கும் என தெரிகிறது.

Uttar Pradesh Election Samajwadi Congress Rahul Gandhi

உத்தர பிரதேசம்

உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தம் 403 தொகுதிகள் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி சுமார் 200 தொகுதிகளில் போட்டியிட விரும்பியதாக கூறப்படுகிறது. இதற்காக 181 தொகுதிகள் அடங்கிய பட்டியலையும் சமாஜ்வாதி கட்சியிடம் வழங்கியிருந்தது. 181க்கு எல்லாம் வாய்ப்பே இல்லை என்பதே சமாஜ்வாதியின் முதல் ரெஸ்பான்ஸாக இருக்கிறது. குறிப்பாக இப்போது சிட்டிங் எம்எல்ஏக்கள் இருக்கும் தொகுதிகளை விட்டுக்கொடுக்க சமாஜ்வாதி விரும்பவில்லையாம்.

திட்டம் என்ன

இதனால் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி எந்த தொகுதிகளில் எல்லாம் 20,000க்கும் அதிகமான வாக்குகளை பெற்றதோ அந்த தொகுதிகளை மட்டும் முதற்கட்டமாகப் பரிசீலிக்க சமாஜ்வாதி கட்சி திட்டமிட்டுள்ளது. 2022 தேர்தலில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் 399 தொகுதிகளில் களமிறங்கியது. இருப்பினும், இரு தொகுதிகளில் மட்டுமே வென்றது. 20,000+ வாக்குகளை 21 தொகுதிகளில் மட்டுமே பெற்றது. எனவே, அந்த 21 தொகுதிகள் மட்டுமே பேச்சுவார்த்தையின் முதல் கட்டத்தில் இடம் பெறும் என கூறப்படுகிறது.

இது தவிர 20,000 வாக்குகளுக்கு நெருக்கமாக பெற்ற 4 தொகுதிகளையும் சேர்த்து பரிசீலிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் 10,000 முதல் 20,000 வாக்குகள் வரை பெற்ற தொகுதிகளையும் பேச்சுவார்த்தையில் சேர்க்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய சந்திப்பு

கடந்த திங்கள்கிழமை நடந்த சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார். டெல்லியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் இருவரும் சந்தித்து கொண்டனர். அப்போது தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்றாலும் என்றாலும் இரு தரப்பிற்கும் இடையே இருந்த சிறு குழப்பங்கள் தீர்க்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை சீக்கிரமே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் காந்தி

ராகுல் காந்தியை பொறுத்தவரை இந்த முறை உத்தர பிரதேச தேர்தலை ரொம்பவே சீரியஸாக எடுத்து கொண்டுள்ளார். அகிலேஷ் உடனான கூட்டணியையும் முக்கியமானதாாக பார்க்கிறார். இதன் காரணமாகவே சமீபத்தில் உத்தர பிரதேச காங்கிரஸ் நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி முக்கிய கூட்டணி கட்சி என்று குறிப்பிட்டு பேசியிருந்தார். அதிகபட்ச இடங்களில் போட்டி என்பதை விட, எந்த தொகுதியில் எந்த கட்சி போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை பொறுத்து தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதை அவர் ஆதரித்ததாக கூறப்படுகிறது.

எனவே, காங்கிரஸ் கட்சி முதலில் கேட்ட 181 தொகுதிகள் என்பதில் இருந்து நிச்சயம் இறங்கி வரும் என்றே தெரிகிறது. அதேநேரம் அகிலேஷ் கட்சி முதலில் 24 தொகுதிகள் என்பதில் இருந்து பேச்சுவார்த்தையை தொடங்கும் என்பதால் இரு தரப்பும் ஒரே நம்பரில் ஒத்துக்கொள்ள பலகட்ட பேச்சுவார்த்தை நடத்த வேண்டி இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+