கரப்பான் பூச்சி நிர்வாகி.. "அடித்து மண்டையை பிளந்தேன்.." வாயை விட்ட வலதுசாரி ஆதரவாளர் கைது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற மாணவரின் தந்தையை தாக்கியதாக தீவிர வலதுசாரி ஆதரவாளரான ஸ்வதந்திர பரத்வாஜ் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது. தனது குற்றத்தை ஏதோ பெருமையான விஷயம் போல அவர் வீடியோவில் சொல்லவே.. அந்த வீடியோ டிரெண்டானதால் உபி போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின்போது மாணவர் போராட்டக்காரர் நிஷு ஆசாத்தின் தந்தை சஞ்சய் குமாரை தாக்கியதாக பரத்வாஜ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான பாட்காஸ்ட் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து, பரத்வாஜை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்தன.

Swatantra Bhardwaj Arrest

போராட்டம்

கடந்த ஜூன் 23ஆம் தேதி நீட் வினாத்தாள் லீக் உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. அப்போது சஞ்சய் குமார் தனது செல்போனில் போராட்டத்தை பதிவு செய்து கொண்டிருந்ததாகவும், இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது இரண்டு அல்லது மூன்று பேர் இணைந்து சஞ்சய் குமாரை தாக்கியதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. அவரது தலையில் குத்தியதுடன், இரும்பு வளையம் போன்ற கடினமான பொருளால் தாக்கியதாகவும் சஞ்சய் குமார் குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து அவர் ஆர்எம்எல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரது தலையில் இரண்டு காயங்கள் இருந்ததாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

வழக்குப்பதிவு

இந்த விவகாரம் தொடர்பாக ஸ்வதந்திர பரத்வாஜ் மற்றும் சூரஜ் குமார் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேநேரம் சஞ்சய் குமாரின் மண்டை ஓடு உடைந்ததாக கூறப்படும் தகவல்களை போலீசார் மறுத்துள்ளனர். சஞ்சய் குமாருக்கு ஏற்பட்ட காயங்கள் சாதாரணமானவை என்றே மருத்துவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அப்போதே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், இந்த வழக்கில் நடவடிக்கை எதுவும் இல்லை. இதற்கிடையே பரத்வாஜ் சமீபத்தில் வெளியான பாட்காஸ்ட் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. அதுவே சர்ச்சையை மீண்டும் கிளப்பியது. அதாவது சஞ்சய் குமாரின் தலையை தான் உடைத்ததாகவும், அவருக்கு சுமார் 60 தையல்கள் போடப்பட்டதாகவும் பரத்வாஜ் கூறியிருக்கிறார்.

கொலை முயற்சி

அவர் மேலும், "இந்த சம்பவம் கொலை முயற்சிக்கு இணையானது. ஆம்புலன்சில் அவர் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். நான் கைது செய்யப்படாமல் இருப்பதற்கு அரசியல் தொடர்புகள் காரணம்" என சொல்லி இருந்தார். அதாவது ஒருவரை கொடூரமாக தாக்கிவிட்டு, ஏதோ பெருமைப்படும் விஷயம் போல அதை சொல்லி இருக்கிறார்.

இஸ்லாமியர்கள் குறித்தும் பரத்வாஜ் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியிருந்தார். இஸ்லாமியர்கள் மீது தனக்கு அதிக வெறுப்பு இருப்பதாகவும், அவர்களிடம் இருந்து பொருட்களை வாங்குவதையே தவிர்ப்பதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும், இஸ்லாமியர்களுக்கு எதிராக பொருளாதார புறக்கணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும், தனி கட்சி தொடங்கி முஸ்லிம் இல்லாத இந்தியாவை உருவாக்க முயல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

சர்ச்சை

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. மேலும், பரத்வாஜை கைது செய்ய வேண்டும் என்றும் கரப்பான் பூச்சி கட்சியினர் வலியுறுத்தினர். இது பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், கரப்பான் பூச்சி கட்சி நிர்வாகிகள் ஆஷுதோஷ் ரங்கா, சவுரவ் தாஸ், காங்கிரஸ் பிரதிநிதிகள் மற்றும் நாகினா எம்.பி. சந்திரசேகர் ஆசாத் ஆகியோர் அணுகி பரத்வாஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இது தொடர்பாக டெல்லி போலீசாரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

கைது

இது பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், பரத்வாஜ் பல்டி அடித்தார். அதாவது சஞ்சய் குமாரை திட்டமிட்டு தாக்கவில்லை என்றும் தற்காப்புக்காகவே தாக்கியதாகவும் பரத்வாஜ் கூறியுள்ளார். தன்னை 10 முதல் 15 பேர் சூழ்ந்ததாகவும் இதனால் தான் தாக்க வேண்டி இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தச் சூழலில் தான் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+