பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய உத்தரகாண்ட்.. இன்று புனிதமான நாள்: துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்
டெல்லி: தேவபூமி என போற்றப்படுகிற உத்தரகாண்ட் ,மாநிலம் இன்று முதல் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும் என்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்ட இன்றைய நாள் புனிதமானது என்றும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார்.
ராஜ்யசபா உள்ளகப் பயிற்சித் திட்டத்தின் ஐந்தாவது தொகுதி பங்கேற்பாளர்களுக்கான தொடக்க நிகழ்ச்சிக்கு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தலைமை தாங்கினார். துணை ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற உள்ளகப் பயிற்சித் திட்டத்திற்கான இணைய தளத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

ராஜ்யசபா உள்ளகப் பயிற்சி திட்டத்தில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், இன்று ஒரு நல்ல அறிகுறி ஏற்பட்டுள்ளதாகவும், அது மங்களகரமான அடையாளம் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியவர்கள் அரசியலமைப்பில், குறிப்பாக பகுதி 4-ல் அரசு கொள்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக வழிகாட்டியுள்ளனர். இந்த நெறிமுறைக் கோட்பாடுகளை அடைய அரசு கடுமையாக உழைக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 44-ன்படி நாடு முழுவதும் குடிமக்களைப் பாதுகாக்க ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வகை செய்கிறது என்று தெரிவித்தார். நாம் அனைவரும் இன்று மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கிறோம். தேவபூமி உத்தரகண்ட் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியுள்ளதற்காக அந்த அரசின் தொலைநோக்குப் பார்வையைத் தாம் பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டார். நாடு முழுவதும் இந்த சட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.
சட்டவிரோதமாக குடியேறியவர்களால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை சுட்டிக்காட்டிய துணை ஜனாதிபதி தன்கர், இவ்வாறு குடியேறிய லட்சக்கணக்கானவர்கள் தேசத்திற்கு சவாலாக உள்ளனர் என்றார். அவர்கள் நமது மக்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பெறுகின்றனர் என்பதால், அரசில் உள்ள ஒவ்வொருவரும் இது குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications