உத்தரகாண்ட் சுரங்கத்தில் புகுந்த வெள்ளம்.. 7 பேர் பலி, 2 பேர் சிக்கி தவிப்பு.. மீட்புப் படை தீவிரம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சமோலி மாவட்டத்தில் உள்ள நீர்மின் திட்ட சுரங்கப்பாதைக்குள் திடீரென வெள்ள நீர் மற்றும் களிமண் கழிவுகள் புகுந்ததில் 7 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர்.

மேலும் 2 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Uttarakhand

திடீரென சீறிப்பாய்ந்த வெள்ளம்

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டம் பிபல்கோடி பகுதியில் டெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நீர்மின் திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வியாழக்கிழமை மாலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலை 6.30 மணியளவில், பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளமும், அதிகளவிலான சேறு மற்றும் இடிபாடுகளும் எதிர்பாராதவிதமாக சுரங்கப்பாதைக்குள் சீறிப்பாய்ந்து நுழைந்தன.

அச்சமயத்தில் சுரங்கப்பாதையின் உட்பகுதியில் மொத்தம் 22 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். வெள்ளத்தின் கடுமையான நீர் ஓட்டம் மற்றும் அதிவேக அழுத்தம் காரணமாக, அங்கிருந்த பல தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டு சுரங்கத்தின் வெளியேற்றப் பகுதியை நோக்கி அடித்துச் செல்லப்பட்டனர்.

7 பேர் உயிரிழப்பு - 14 பேர் காயம்

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இந்த எதிர்பாராத விபத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 14 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்னும் 2 தொழிலாளர்கள் சுரங்கப்பாதையின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். அவர்களை உயிருடன் மீட்கும் நோக்கில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கை

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுரங்கத்தில் படிந்துள்ள சேறு மற்றும் இடிபாடுகளை அகற்றி, சிக்கியுள்ளவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் லாக்பத் புடோலா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், இது மிகவும் துயரமான மற்றும் பேரதிர்ச்சியளிக்கும் சம்பவம். மீட்பு படையினர் மற்றும் அதிகாரிகள் அனைவரும் களத்தில் உள்ளனர். மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தடையின்றி வழங்குவதே எங்கள் முதன்மை நோக்கம்" எனக் குறிப்பிட்டார்.

மாவட்ட ஆட்சியர் விபத்து குறித்து கூறுகையில், மாலை 6.30 மணியளவில் பெரும் அளவிலான சேறும் தண்ணீரும் கட்டுக்கடங்காமல் சுரங்கத்திற்குள் புகுந்ததே இந்தத் அசம்பாவிதத்திற்கு முக்கியக் காரணம் எனத் தெரிவித்தார்.

முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஆய்வு

உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நிலைமை குறித்து மூத்த அதிகாரிகளிடம் இருந்து உடனுக்குடன் தகவல்களைப் பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சர் தாமி, அவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களில் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இருப்பதால், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர்களைத் தொடர்புகொண்டு பேசியதாகவும், அவர்களின் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக உறுதி அளித்துள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+