நீ போகாதே என்னை விட்டு.. டார்லிங் .. டெல்லி ஏர்போர்ட்..இண்டிகோ செம்ம காதல் மழை!
டெல்லி: காதலர் தினத்தன்று டெல்லி விமான நிலையத்துக்கும், இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா (ஏஐ) உள்ளிட்ட விமான நிறுவனங்களுக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாகத் தெரிகிறது. ஏன் இப்படி சொல்றேன்னா, காலையில் இருந்து இவர்களின் அழும்பு டுவிட்டரில் தாங்க முடியவில்லை. என்னம்மா கொஞ்சிக்கிறாங்க..!
காதலர் தினத்தில் காதலர்கள் தான் கொஞ்சிக்கிறனுமா.. நாங்களும் கொஞ்சுவோம்ல என்ற ரீதியில் புறப்பட்டுவிட்டன விமான நிறுவனங்களும், டெல்லி விமான நிலையமும்.
இந்தியாவின் முக்கியமான விமான நிலையம் டெல்லி. இந்தியாவை தொழில் ரீதியாக மும்பை நகரை மூளை என்று சொன்னால் (பேச்சுக்கு), டெல்லியை இந்தியாவின் இதயம் என்று சொல்லாம். காதலர் தினம் பாஸ்.. அதனால் தான் இப்படி சொல்ல வேண்டியிருக்கு .. சரி விஷயத்துக்கு வருவோம். காதலின் சாட்சியாக இதயத்தை தான் சிம்பளாக சொல்கிறோம்.

சிட்டுக்குருவி போல்
அந்த வகையில் இந்தியாவின் இதயமான டெல்லியில் உள்ள விமானநிலையம் திடீரென தன்னோடு என்றும் அன்பை பரிமாறிவரும் விமானநிறுவனங்களிடையே காதல் மழை பொழிந்துள்ளது. பதிலுக்கு அனைத்து விமான நிறுவனங்களும் காதல் மழை பொழிந்திருக்கின்றன. ஒவ்வொரு நாளும் வருவதும் பறப்பதுமாக, சிட்டுகுருவிக்கும் கூட்டுக்கும் உள்ள உறவை போன்றது இந்த உறவு. இதை வார்த்தைகளால் நாமே வர்ணித்தால் எப்படி. சரி அவங்க என்னபேசிக்கிட்டாங்க என்பதை இப்போது பார்ப்போம்
|
என்னை விட்டு போகாதே
இன்று காலை ஒரு ட்வீட்டில், டெல்லி விமான நிலையம் இண்டிகோ ஏர்லைன்ஸுக்கு முதல் காதல் டுவிட்டை வெளியிட்டது, "ஏய்! இண்டிகோ, என் ஓடுபாதையில் இருந்து நீ ஒருபோதும் ஓட மாட்டாய் என்று எனக்கு சத்தியம் செய் (அதாங்கா.. விக்ரம் வேதாவில் வருமே... நீ போகாதே என்னை விட்டு.. என் கண்ணே.. உன் முன்னே.. என் உசுரை தவியாய் தவிக்க விட்டு விட்டு.. பாட்டை டியூன் பண்ணிக்கங்க) ! #DELlovesYou # ValentinesDay2020."

என்னை சேர்க்கும்
அதற்கு பதில் டுவிட் போட்ட இண்டிகோ "ஏய்! டெல்லி ஏர்போர்ட் ஓ அன்பே, உன் அன்பு ஒவ்வொரு முறையும் என்னை சரியான நேரத்தில் கொண்டு வருகிறது! (இதுக்கு எந்த பாட்டும் தேவையில்லை பாஸ்) #DELlovesYou # ValentinesDay2020 #LetsIndiGo." என பதிவிட்டுள்ளது.

குச் குச் ஹோதா ஹை
இருவருக்கிடையேயான காதல் மழை இத்துடன் முடியவில்லை.. டெல்லி விமான நிலையம் மீண்டும் ஆரம்பித்து "என் அன்பே, இண்டிகோ, என்னிடம் பல சிறப்பான எதிர்கால திட்டங்கள் இருக்கிறது! #DELlovesYou # ValentinesDay2020." என்று கூறியுள்ளது. இதற்கு, இண்டிகோ, ஷாருக்கானின் ஹிட் திரைப்படமான குச் குச் ஹோதா ஹை பற்றி குறிப்பிட்டு "டெல்லி ஏர்போர்ட்" குச் குச் ஹோடா ஹை "என்று நீங்கள் கூறும்போதெல்லாம் #DELlovesYou # ValentinesDay2020 #LetsIndiGo." என்று பதிவிட்டுள்ளது.

அதையும் தாண்டி புனிதம்
டெல்லி விமான நிலையம் இண்டிகோவிற்கு அழகான பதிலைக் கொடுத்தது, "நான் உன்னைப் பற்றியே எப்போதும் நினைத்து கொண்டு இருக்கிறேன். #DELlovesYou # ValentinesDay2020." என கூறியிருந்தது. டெல்லி விமான நிலையத்திலிருந்து வந்த இந்த அன்பை ஒப்புக் கொண்ட இண்டிகோ, டெல்லி ஏர்போர்ட் உன் காதல் விவகாரம் அதையும் தாண்டியது என்று எனக்குத் தெரியும்! #DELlovesYou # ValentinesDay2020 #LetsIndiGo " என கூறியுள்ளது.
|
ஏர் இந்தியாவுடன் கொஞ்சல்
இண்டிகோவைத் தவிர, டெல்லி விமான நிலையம் ஏர் இந்தியா மீதான தனது பாசத்தையும் ட்வீட் செய்தது. "ஏய் ஏர் இந்தியா, நீ தான் என் முதல் விமானம் என்பதால், நீ எப்போதும் என் அன்பாக இருப்பாய்! #DELlovesYou # ValentinesDay2020," என்று அது கூறியது. அதற்கு பதிலளித்த ஏர் இந்தியா, "டெல்லி ஏர்போர்ட் உங்களிடத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பெறுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கூறியது. இதைத் தொடர்ந்து, டெல்லி விமான நிலையம், "நீங்கள் எப்படி இவ்வளவு சிம்பிளாக இருக்கீங்க என்பதை நான் அறிய விரும்புகிறேன். #DELlovesYou # ValentinesDay2020" என்று ஸ்விட் பதிலை அளித்தது. இப்படியே அன்பு பரிமாறிக்கொண்டே இருந்தார்கள்.. நல்லாத்தான் இந்த காதலும் இருக்கு.. !
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications