டெல்டா வகை கொரோனாவிற்கு எதிராக.. வேக்சின்களுக்கு 8 மடங்கு செயல் திறன் குறைவாம்.. அதிர்ச்சி ஆய்வு!
டெல்லி: டெல்டா வகை கொரோனாவிடம் வேக்சின்கள் 8 மடங்கு செயல்திறன் குறைவானதாக இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
Recommended Video
டெல்டா வகை கொரோனா வைரஸ் குறித்து உலகம் முழுக்க பல்வேறு நாடுகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றன. இந்த வகை கொரோனா மிகவும் மோசமானது, வேகமாக பரவ கூடியது என்று பல்வேறு நாடுகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றன.
முக்கியமாக இந்த டெல்டா வகை வைரஸ் கொரோனா வேக்சின் எடுத்தவர்களையும் கூட பாதிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில் சர் கங்காராம் மருத்துவமனையில் இது தொடர்பாக செய்யப்பட்ட ஆய்வுகள் அதிர்ச்சி அளித்துள்ளன.

ஆய்வு
அதன்படி கொரோனா வைரஸ் வேக்சின்கள் டெல்டா வகை கொரோனாவிடம் 8 மடங்கு செயல்திறன் குறைவானதாக இருப்பதாக ஆய்வு தெரிவித்துள்ளது. அதாவது மற்ற வகை கொரோனாவிடம் இருக்கும் பவரை விட டெல்டா வகை கொரோனாவிடம் 8 மடங்கு குறைவான பவரையே வேக்சின் கொண்டு இருக்கிறது. சர் கங்காராம் மருத்துவமனையில் இது தொடர்பாக செய்யப்பட்ட ஆய்வில் இந்த முடிவுகள் வெளியாகி உள்ளன.

முடிவுகள்
"Sars-Cov-2 B.1.617.2 Delta Variant Emergence and Vaccine Breakthrough: Collaborative Study என்ற தலைப்பில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களிடம் இந்த ஆய்வு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஆய்வில் கேம்பிரிட்ஜ் இன்ஸ்டிடியூட் ஆப் தெரபியூடிக் இம்யூனாலஜி மற்றும் தொற்று நோய் பிரிவு ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.

முடிவு
இந்த ஆய்வில் முடிவில், கொரோனா வேக்சின் எடுத்தவர்கள் இடையில் பரவும் கொரோனா வகையில் டெல்டா வகை கொரோனாதான் அதிகம் காணப்படுகிறது. டெல்டா வகை கொரோனா வேக்சின் எடுத்தவர்களிடம் பரவும் போது, அவர்களிடம் வைரல் லோட் அதிகம் உள்ளது. சாதாரண வகை கொரோனா இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துவது இல்லை.

பாதிப்பு
8 மடங்கு அதிக ஆற்றல் கொண்டதாக இது உள்ளது. அதோடு முழுதாக வேக்சின் போட்டவர்களும் மத்தியிலும் அதிக பரவும் திறன் கொண்டதாக உள்ளது. இந்த வைரஸ் வேகமாக பிரதி எடுக்கிறது. இது பரவலின் வேகத்தை அதிகமாக்குகிறது. 2 டோஸ் வேக்சின் எடுத்தவர்கள் டெல்டா வகை மூலம் மருத்துவமனையில் அனுமதி ஆவது குறைவு என்றாலும் இவர்கள் மற்றவர்களுக்கு டெல்டா வகையை பரப்பும் வாய்ப்பு அதிகம்.

வேக்சின்
வேக்சின் எடுக்காதவர்கள் மத்தியில் டெல்டா வகை வைரஸ் இதனால் அதிகம் பரவ வாய்ப்புள்ளது. இது மருத்துவமனையில் புதிய கிளஸ்டர்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. புதிய அலைகளை இது ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று இந்த ஆய்வு அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications