காதலர் தினம்.. நிமிடத்திற்கு 581 சாக்லெட், 324 ரோஸ் ஆர்டர்.. ஸ்விக்கி நிறுவனத்தை அலறவிட்ட இளைஞர்கள்!
டெல்லி: இந்தியாவில் காதலர் தினத்தன்று ஒரு நிமிடத்திற்கு 581 சாக்லெட்கள், 324 ரோஸ் மற்றும் 607 கேக்குகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக ஸ்விக்கி விநியோக செயலியின் துணை நிறுவனர் பானி கிஷன், சாக்லெட்டுகளுக்கான ஆர்டர் 5 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், ரோஸ் ஆர்டர் 16 மடங்கு உயர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தன்று தங்களின் காதலன், காதலிக்கு பரிசை வழங்குவதை இளைஞர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். தங்களின் அன்பை காட்டும் வகையிலான பரிசுப் பொருட்கள், சாக்லெட், கேக், டைரி மில்க், ரோஸ், பூங்கொத்து என்று பல்வேறு விதமாக காதலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இந்தியாவில் காதலர் தினத்தன்று பெரும்பாலானோர் தங்களின் காதலன், காதலிக்கு சாக்லெட் மற்றும் ரோஸ் ஆகியவற்றை பரிசாக அளித்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் டைரி மில்க் நிறுவனம் தரப்பில் ஸ்பெஷல் சில்க் வகை டைரி மில்க் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த டைரி மில்க் சாக்லெட்டிற்குள் இதய வடிவிலான சாக்லெட் இடம்பெற்றது பல்வேறு தரப்பிலும் வரவேற்பை பெற்றது.
அதேபோல் சாக்லெட், ரோஸ் மற்றும் கேக் உள்ளிட்டவற்றை நேரில் வழங்க இயலாதவர்கள் ஸ்விக்கி நிறுவனம் மூலமாக தங்களின் காதலன், காதலிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் காதலர் தினத்தன்று ஸ்விக்கி செயலியில் சாக்லெட், கேக் மற்றும் ரோஸ் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை உச்சம் பெற்றது. இதுதொடர்பான முழு தகவலையும் ஸ்விக்கி விநியோக தளத்தின் இணை நிறுவனர் பானி கிஷன் வெளியிட்டுள்ளார்.
அதன்படி பானி கிஷான் கூறுகையில், ஒரு நிமிடத்திற்கு 581 சாக்லெட் மற்றும் 324 ரோஸ் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. காதலர் தினத்தன்று தங்களின் தேவை உச்சத்தில் இருக்கிறது. காதலுக்கென்று ஸ்டாக் மார்க்கெட் இருந்தால், அதில் உள்ள காளையின் உச்சம் இதுதான். டெல்லியில் இருந்து மட்டும் ஒரு வாடிக்கையாளர் 24 ஆர்டர் மூலமாக 174 சாக்லெட் ஆர்டர் செய்து, ரூ.29,844 செலவழித்திருக்கிறார்.
வெள்ளிக்கிழமைகளில் வரும் ஆர்டரை விடவும் காதலர் தினத்தன்று 5 மடங்கு கூடுதல் ஆர்டர்கள் வந்துள்ளது. சாக்லெட்டை விடவும் ரோஸ் வாங்கும் வகையிலான ஆர்டர்கள்தான் உச்சத்தில் இருந்தது. வெள்ளிக்கிழமைகளில் வரும் ரோஸ் ஆர்டரை விடவும், 16 மடங்கு கூடுதலாக ஆர்டர்கள் குவிந்துள்ளது. அதேபோல் நிமிடத்திற்கு 607 கேக்குகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications