அசத்துதே வந்தே பாரத்.. இது லிஸ்ட்லயே இல்லை.. குட்நியூஸ் தந்த ஐசிஎப்.. இன்னும் சில நாட்கள்தான்.. வாவ்
டெல்லி: படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. இதைத்தவிர, பயணிகளுக்கு டபுள் குட்நியூஸ் வெளியிட்டுள்ளது மத்திய அரசு.
வந்தே பாரத் ரயிலில் பல நவீன வசதிகள் உள்ளதால், மக்களால் ஈர்க்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலில், என்ஜின், ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்.. வந்தே பாரத் திட்டம் பிரதமர் மோடியின் கனவுத்திட்டம் என்பதால்தான், ஒவ்வொரு வந்தே பாரத் ரயில் சேவையையும் நேரடியாகவே சென்று பிரதமர் துவக்கி வைத்து வருகிறார்.

வந்தே பாரத்: நம்முடைய தமிழ்நாட்டில்கூட, 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.. சென்னை - மைசூரு & சென்னை - கோவை ஆகிய வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயங்குகின்றன. இதில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இப்போது, சென்னையிலிருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்தப்போவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்து, அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால் தென் மாவட்ட மக்கள் இந்த ரயிலை அதிகம் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
சாதாரண் வந்தே பாரத்: இதுபோக, ஆரஞ்சு நிற வந்தேபாரத் நெல்லை-சென்னை ரோட்டில் தான் இயங்கும் என்கிறார்கள். இதுபோக, குறைந்த கட்டணத்தில் "சாதாரண் வந்தே பாரத்" வரப்போவதாக சொல்கிறார்கள். இந்நிலையில், அடுத்த 5 வருடங்களில் வந்தே பாரத் ரயில், 100 சதவீதமும் இந்தியாவில் தயாராகும் என்று குட்நியூஸ் வெளியிடப்பட்டுள்ளது.
ஐசிஎப் பொதுமேலாளர் மால்யா இதுகுறித்து சொல்லும்போது, "உலகிலேயே அதிக ரயில் பெட்டிகளை தயாரிக்கும் நிறுவனமாக, ஐசிஎப் திகழ்கிறது.. வருடத்துக்கு சராசரியாக, 3,000 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இதுவரை, 71,000 ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. அண்டை நாடுகள், சிறிய நாடுகள், வளர்ந்த நாடுகள் என்று 14 நாடுகளுக்கு, ரயில் பெட்டிகளை ஐசிஎப் ஏற்றுமதி செய்கிறது.
பாதுகாப்பு: வந்தே பாரத் ரயில், இந்திய ரயில்வே வரலாற்றில் புதிய வரலாறு படைத்துள்ளது.. பாதுகாப்பு, வேகம், வசதி, செயல் திறன் ஆகியவற்றில் வந்தே பாரத் ரயில் முதலிடத்தில் உள்ளது. இப்போது வடகிழக்கு மாநிலங்கள் தவிர, மற்ற அனைத்து மாநிலங்களிலும், 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. விரைவில் மேலும், 10 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இப்போது, வந்தே பாரத் ரயிலின், 87 சதவீதம் நம் நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது. ரயில் சக்கரம் உட்பட, 13 சதவீத பாகங்கள் தென்கொரியா மற்றும் ஐரோப்பிய வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அடுத்த 5 வருடங்களில் வந்தே பாரத் ரயில், 100 சதவீதமும் இந்தியாவில் தயாராகும். வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசப்படுவதால் சேதம் அடைந்த ஜன்னல்களை மாற்ற இதுவரை, 60 லட்சம் ரூபாய் செலவாகியிருக்கிறது.
டபுள் குஷி: படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில், 2024 பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தயாராகி விடும். அதுபோல, "வந்தே மெட்ரா" ரயிலும் வரும் ஜனவரியிலும் தயாராகி விடும்" என்றார். இந்த அறிவிப்புகள் ரயில் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications