வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இந்த ரூட்டில் தான் ஓடப் போகுதாம்.. எப்போதில் இருந்து தெரியுமா?
டெல்லி: வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ள நிலையில் தற்போது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் எந்த ரூட்டில் முதலில் சேவைக்கு வருகிறது என்றும், என்றைக்கு முதல் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பயண நேரம் குறைவு, முழுவதும் ஏசி வசதி, சொகுசான இருக்கைகள் என பயணிகளை கவரும் விதமாக இந்த ரயில் சேவை இருப்பதால் வந்தே பாரத் ரயில்களில் பயணிகள் விரும்பி பயணம் செய்கிறார்கள். தற்போது வந்தே பாரத் ரயில்ககள் இருக்கை வசதி கொண்டவையாக மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

வந்தே பாரத் ரயில்: பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருப்பதால் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களையும் இயக்க ரயில்வே முடிவு செய்தது. அதன்படி, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஐசிஎப்பில் இந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருப்பது போல அதி நவீன வசதிகளுடன் ஸ்லீப்பர் ரயில்கள் இருக்கும் என ரயில்வே அதிகாரிகள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
ஸ்லீப்பர் ரயில் சேவை: படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை தொலை தூரங்களுக்கு இயக்கப்பட உள்ளது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும் திறன் கொண்டவை என்பதால் பயணிகளின் பயண நேரம் மிச்சமாகும். இதனிடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் எந்த வழித்தடத்தில் இயங்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆகஸ்டு 15 முதல் சேவை: வரும் ஆகஸ்டு 15 ஆம் தேதி இந்த ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். டெல்லி - மும்பை அல்லது டெல்லி - கொல்கத்தா ரூட்டில் முதல் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது. டெல்லி டூ கொல்கத்தா இடையேயான வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் என்பது பயணிகளுக்கும் மிகவும் வசதியாக இருக்கும்.
ஹீட்டர் வசதி: அதேபொல நாட்டின் நிதி தலைநகரத்திற்கும் தலைநகரத்திற்கும் இடையே இயக்கப்படலாம் என சொல்லப்படுவதால் பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் முழுக்க ஏசி வசதி கொண்டதாகும். முதல் வகுப்பு பெட்டியில் ஹீட்டர் வசதி உள்ளிட்ட பல வசதிகள் இருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. ராஜ்தானி, சதாப்தி போன்ற சொகுசு ரயில்களுக்கு மாற்றாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் சொல்கிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications