நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்.. கட்டணம் எவ்வளவு? வழக்கமான ரயில்களை விட எவ்வளவு அதிகம்
டெல்லி: ரயில்வே துறை விரைவில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை கொல்கத்தா- கவுகாத்தி வழித்தடத்தில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மாதம் 3வது வாரம் இந்த ரயில்கள் செயல்பாட்டிற்கு வரும் எனத் தெரிகிறது. இதற்கிடையே கொல்கத்தா- கவுகாத்தி வழித்தடத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களின் கட்டண விவரங்கள் இப்போது வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய ரயில்வே துறையில் பல முக்கிய மாற்றங்கள் வந்து கொண்டு இருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவில் முதலில் வந்தே பாரத் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு படிப்படியாகப் பல்வேறு ரூட்களில் வந்தே பாரத் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு மிகப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.

வந்தே பாரத் ஸ்லீப்பர்
அடுத்த கட்டமாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களைக் கொண்டு வர ரயில்வே துறை நடவடிக்கை எடுத்தன. இருப்பினும், சில காரணங்களால் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் பயன்பாட்டிற்கு வருவது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இதற்கிடையே நீண்ட தாமதத்திற்குப் பிறகு ஒரு வழியாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் தங்கள் சேவையை ஆரம்பிக்கப் போகிறது.
எந்த ரூட்!
இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை கொல்கத்தா- கவுகாத்தி வழித்தடத்தில் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தொடங்கவுள்ளார். ரயிலின் சோதனைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இந்தச் சேவை அடுத்த 15-20 நாட்களுக்குள், குறிப்பாக ஜனவரி 18 அல்லது 19 அன்று தொடங்கப்படலாம் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இன்னும் ஓரிரு நாட்களில் தேதி இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ரயில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி வரை இயக்கப்படுகிறது. இந்த மேற்கு வங்கம் மற்றும் அசாம் என இரு மாநிலங்களிலுமே இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மேலும், வந்தே பாரத் ரயிலின் கட்டண விவரங்களையும் அமைச்சர் வைஷ்ணவ் வெளியிட்டார்.
கட்டண விவரம்
வந்தே பாரத் ஸ்லீப்பரை பொறுத்தவரை மூன்றாம் வகுப்பு ஏசி பயணக் கட்டணம் உணவுடன் ₹2,300ஆகவும், இரண்டாம் வகுப்பு ஏசி சுமார் ₹3,000 ஆகவும், முதல் வகுப்பு ஏசிக்கு சுமார் ₹3,600 ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை விமானச் சேவையை விடக் குறைவாகவும் வழக்கமான ரயில்களை விடச் சற்று அதிகமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக இந்த ரூட்டில் 3ம் வகுப்பு ஏசி பெட்டிகளுக்கு ரூ.1300 முதல் ரூ.1700 வரை கட்டணமாக இருக்கிறது. வந்தே பாரத்தில் இதே வகுப்பிற்கு ரூ.2,300ஆக கட்டணம் இருக்கிறது. 2ம் வகுப்பு ஸ்லீப்பர் டிக்கெட் ரூ.1900ஆக உள்ள நிலையில், வந்தே பாரத்தில் அது ரூ.3000ஆக உள்ளது. முதலாம் வகுப்பு ஏசி டிக்கெட் வழக்கமான ரயில்களில் ரூ.3300ஆக உள்ள நிலையில், வந்தே பாரத்தில் ரூ.3600ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே அமைச்சர்
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இது தொடர்பாக மேலும் பேசுகையில், "இந்தக் கட்டணங்கள் விமானப் பயணக் கட்டணங்களை விடக் கணிசமாகக் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன.. கவுஹாத்தி- ஹவுரா விமானப் பயணத்திற்கு ₹6,000 முதல் ₹8,000 வரை செலவாகும். மிடில் கிளாஸ் மக்களைக் குறிவைத்தே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களின் கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள், சிறப்பான சஸ்பென்ஷன் உள்ளன. இது நீண்ட தூரப் பயணங்களை ஈஸியாக மாற்றும். 1,000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீண்ட தூரப் பயணங்களுக்காகவே இவை பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் பல்வேறு வசதிகள் உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் 12 ரூட்களில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை அறிமுகப்படுத்த உள்ளோம்" என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications