வரலாற்றில் முதல் முறை.. நாடாளுமன்றத்தில் முழு வந்தே மாதரம் பாடல்.. மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவுக்கு வந்தது. கடைசி நாளான இன்று லோக்சபா, ராஜ்யசபா என்று நாடாளுமன்றத்தின் இருசபைகளிலும் வரலாற்றிலேயே முதல் முறையாக தேச பாடலான 'வந்தே மாதரம்' முழுமையான 6 பத்திகளுடன் பாடப்பட்டது.

vande-mataram-played-with-6-stanzas-in-parliament-for-the-first-time-and-both-sabha-sine-die

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி தொடங்கி இன்று வரை நடந்தது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு நடுவே பல்வேறு முக்கிய மசோதாக்கள் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டம் இந்த கூட்டத்தொடரில் பெரும் பிரச்சனையாக எதிரொலித்தது. போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலளிக்கும்படி எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டம், அமளி செய்து வந்தனர்.

இன்று நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் தொடங்கியது. லோக்சபா நடவடிக்கைகள் காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது உடனடியாக எதிர்க்கட்சிகள் கோஷமிட தொடங்கினர். மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் போலீஸ் நடவடிக்கைக்கு எதிராக பதிலளிக்கும்படி கோஷமிட்டனர். இதற்கு எதிராக ஆளும் கட்சியினர் பதில் கேஷம் போட்டனர். பிரதமர் மோடியும் சபைக்குள் வந்தார்.

இதையடுத்து 'வந்தே மாதரம்' முழு பாடலும் 3 நிமிடம் 10 வினாடிகளில் பாடி முடிக்கப்பட்டது. லோக்சபாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்பட அனைத்து எம்பிக்களும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கம் மற்றும் முடிவில் 'வந்தே மாதரம்' பாடல் பாட வேண்டியது கட்டாயம் என்பதால் முதல் முறையாக லோக்சபாவில் 6 பத்திகளுடன் பாடல் படப்பட்டது. அதன்பிறகும் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோஷமிட்டதால் லோக்சபா தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார்.

அதேபோல் கடைசி நாளான ராஜ்யசபாவிலும் இன்று 'வந்தே மாதரம்' பாடல் 3 நிமிடங்கள் 10 வினாடிகள் பாடி தொடங்கப்பட்டது. இந்த சமயத்தில் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.அதன்பிறகு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை)திருத்த மோதா 2026 நிறைவேற்றப்பட்டது. பிறகு ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சிகள் கோஷத்தில் அந்த சபையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதன்மூலம் 2026ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடிவுக்கு வந்துள்ளது.

முன்னதாக தேச பாடலான 'வந்தே மாதரம்' பாடலுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். அவமதித்தால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ராஜ்யசபா, லோக்சபாவில் மசோதா நிறைவேற்றப்பட்டது. The Preention of Insults to National Honour (Amendment Bill) 2026 என்ற பெயரில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி நாட்டின் தேசியக்கொடி, தேசியகீதம் உள்ளிட்டவற்றை அவமதித்தால் கிடைக்கும் தண்டனை வந்தே மாதரம் பாடலை அவமதிக்கும்போதும் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டது.

அதன்டி அதிகபட்சமாக 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் இல்லாவிட்டால் சிறை தண்டனையுடன், அபராதம் விதிக்கப்படும். வந்தே மாதரம் முழு பாடல் பாட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு நாடாளுமன்றத்தில் முதல் முறையாக 6 பத்திகளுடன் அந்த பாடல் இன்று பாடப்பட்டுள்ளது.

இன்றுடன் நிறைவு பெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மொத்தம் 19 அமர்வுகள் நடந்தன. நாடாளுமன்றத்தில் மொத்தம் 12 மசோதாக்கள் நிறைவற்றப்பட்டுள்ளன. இதுபற்றி நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ கூறுகையில், ''நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அலுவல் ரீதியாக பார்க்கும்போதும் இது வெற்றிகரமான கூட்டத்தொடராக அமைந்துள்ளது.

மொத்தம் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.இருப்பினும், விவாதங்கள்,கலந்துரையாடல்கள் என்று பார்க்கும்போது இந்த கூட்டத்தொடர் வெற்றிக்கரமாக அமையவில்லை. லோக்சபாவில் திட்டமிடப்பட்ட நேரத்தில் 19 சதவீத நேரம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ராஜ்யசபாவில் திட்டமிடப்பட்ட நேரத்தில் 39 சதவீதம் எட்டப்பட்டுள்ளது'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+