செல்ல மகள் வாங்கிய பட்டம்.. பூரித்து போன வருண் காந்தி.. வைரலான இந்திரா காந்தியின் கொள்ளு பேத்தி
டெல்லி: பாஜக எம்பியும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பேரனுமாகிய வருண் காந்தியின் மகள் ஒன்றாம் வகுப்பை முடித்துவிட்டு இரண்டாம் வகுப்புக்கு போகிறார். இதை பூரிப்புடன் வருண்காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திரா காந்தியின் பேரனும், மேனகா காந்தியின் மகனுமாகிய வருண் காந்தி பாஜக எம்பியாக உள்ளார். இவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் சகோதரர்கள் ஆவர்.

வருண் காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் பிலிப்பிட் தொகுதியின் பாஜக எம்பியாக உள்ளார். இவரது மகள் அனுசியா பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பை இன்று படித்து முடிந்துள்ளார். தற்போது 2ம் வகுப்பு செல்ல போகிறார். ஒன்றாம் வகுப்பை முடித்த தனது மகள அணுசியாவின் புகைப்படத்தை பூரிப்புடன் வருண் காந்தி பதிவிட்டுள்ளார்.

அதில் ஒன்றாம் வகுப்பை இன்றுடன் நிறைவு செய்த அணுசியாக பட்டதாரி போல் பட்டம் அணிந்து காட்சி அளிக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் குழந்தைக்கும் வருண் காந்திக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். வருண் காந்தியின் மகள் அந்த வகுப்பிலேயே மிக இளையவராம். இந்த தகவலை வருணே டுவிட்டரில் கூறியுள்ளார்.
செல்ல மகளின் கல்வி பயணத்தை ரசிக்கும் வருண் காந்திக்கு வாழ்த்துக்கள் சமூக வலைதளங்களில் குவிந்து வருகிறது. சுமார் 22 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். சுமார் ஆயிரம் பேர் ரீடுவிட் செய்துள்ளனர். 600க்கும் அதிகமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications