Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jagdeep Dhankhar resigns: குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பதவியை திடீரென இன்று இரவு ராஜினாமா செய்துள்ளார். மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை அவர் ராஜினாமா செய்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்து வந்தவர் ஜெகதீப் தன்கர். இந்த நிலையில் திடீரென ஜெகதீப் தன்கர் தனது குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை அவர் ராஜினாமா செய்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

vice-president-jagdeep-dhankhar-resigns-his-post-cites-his-health

குடியரசுத் துணைத் தலைவர்

கடந்த 2022 ஆம் ஆண்டு குடியரசு துணைத்தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்றார். மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கருக்கு குடியரசு துணைத் தலைவர் என்ற உயரிய பொறுப்பு தேடி வந்தது. அதிரடி கருத்துகளுக்கு பெயர் போன ஜெகதீப் தன்கரின் இந்த திடீர் ராஜினாமா பெரும் கவனம் பெற்றுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

உடனடியாக ராஜினாமா செய்கிறேன்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 67(a) பிரிவின் கீழ், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். உடல் நலனை கருத்தில் கொண்டும், மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜெகதீப் தன்கர் அவர்கள் தனது ராஜினாமா குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- உடல்நலத்தைப் பேணி காக்க வேண்டியும், மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டியும், இந்திய அரசியலமைப்பின் 67(a) பிரிவின்படி, குடியரசுத் துணைத் தலைவர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்கிறேன்.

தனக்கு கிடைத்த பாக்கியம்

தனது பதவிக்காலத்தில், நாட்டின் ஜனாதிபதியிடமிருந்து கிடைத்த நிலையான ஆதரவுக்கும், சிறந்த ஒத்துழைப்புக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மகத்தான முன்னேற்றத்திற்கு சாட்சியாக இருந்தததும், அதில் பங்கேற்றதும் தனக்கு கிடைத்த பாக்கியம்.

பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களின் ஒத்துழைப்புக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து தான் பெற்ற அன்பு மற்றும் நம்பிக்கையை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். இந்தியாவின் உலகளாவிய வளர்ச்சி மற்றும் சாதனைகளில் பெருமிதம் கொள்கிறேன். நாட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்" இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

56 ஆண்டுகளுக்கு பிறகு ராஜினாமா

கடந்த 1969 ஆம் ஆண்டு குடியரசுத் துணை தலைவராக இருந்த வி.வி.கிரி, அதே ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பின்னர் குடியரசு துணைத் தலைவர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்வது இப்போது தான் நடந்து இருக்கிறது. 56 ஆண்டுகளுக்கு பிறகு குடியரசுத் துணைத் தலைவர் ராஜினாமா செய்து இருக்கிறார். வி.வி கிரியும் ஜூலை மாதம் தான் ராஜினாமா செய்திருந்த நிலையில் ஜெகதீப் தன்கரும் ஜூலை மாதமே ராஜினாமா செய்து உள்ளார்.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து

ஜெகதீப் தன்கர் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசு தலைவர், கவர்னர்களுக்கு காலம் நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து விமர்சனம் செய்து இருந்தார். இதேபோன்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில், பணக்கட்டுகள் சிக்கிய விவகாரத்தில் ஜெகதீப் தன்கர் தெரிவித்த கருத்துகளும் பரபரப்பாக பேசப்பட்டிருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+