சாவகாசமான நடை.. உல்லாச விடுதி நீச்சல் குளத்தில் தண்ணீர்.. பீதியைக் கிளப்பும் சிறுத்தை வீடியோ!
டெல்லி: உல்லாச விடுதி நீச்சல் குளத்தில் சிறுத்தை ஒன்று சாவகாசமாக தண்ணீர் குடித்த காட்சிகள் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது.
இந்தியாவில் மனிதர்கள் - வன விலங்குகள் மோதல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்வது வழக்கமான நிகழ்வாகிவிட்டது. தண்ணீர்ப் பஞ்சம், உணவுத் தட்டுப்பாடு உள்பட இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் சிறுத்தையின் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், நட்சத்திர உல்லாச விடுதியின் பெண்கள் கழிப்பறை அருகே உள்ள பலகையில் பெரிய சிறுத்தை ஒன்று படுத்திருக்கிறது. பின்னர் அது சாவகாசமாக எழுந்து சென்று நீச்சல் குளத்தில் தண்ணீர் குடித்துவிட்டு, வந்த வழியே திரும்பி செல்கிறது. அந்த வீடியோவை எடுத்த பெண், "சிறிது நேரம் முன்பு அந்த இடத்தில் தான் நான் மடிக்கணினியுடன் அமர்ந்திருந்தேன். நல்லவேளை", என பேசும் ஆடியா கடைசியில் கேட்கிறது.
இந்த வீடியோவை பகிர்ந்த ஓய்வு பெற்ற இந்திய விமானப் படை அதிகாரி அனில் சோப்ரா, ராஜஸ்தானில் உள்ள ரன்தம்போரில் இந்த வீடியோ காட்சிகள் எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார். ஆனால் போலீஸ் அதிகாரி ஒருவர் இந்த காட்சிகள் லோனாவாலாவில் எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார். மற்றொவர், இந்த காட்சி தென்னாப்ரிக்காவின் அமான்சிடோடி எனும் இடத்தில் எடுக்கப்பட்டது என கூறியுள்ளார். எனவே இந்த வீடியோ காட்சிகள் எங்கு எடுக்கப்பட்டது என்பதை யாராலும் உறுதியாக கூற முடியவில்லை.
Lux living with the neighbourhood leopard! pic.twitter.com/yJOy0uMbQi
— अद्वैता काला #StayHome 😷 (@AdvaitaKala) September 16, 2020
ஆனாலும் சிறுத்தை ஒன்று சாவகாசமாகச் சென்று உல்லாச விடுதி ஒன்றின் நீச்சல் குளத்தில் தண்ணீர் குடிக்கும் காட்சிகள் சுற்றுலா விரும்பிகளின் மனதில் பீதியைத்தான் கிளப்பியுள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications