ச்சே கன்றாவி.. டெல்லி மெட்ரோ ரயிலில் மடியில் படுத்திருந்த காதலிக்கு லிப் லாக் கொடுத்த இளைஞர்
டெல்லி: டெல்லி மெட்ரோ ரயிலுக்கு நேரமே சரியில்லை போல! தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ரயிலில் அத்தனை பேர் முன்னிலையில் காதல் தம்பதி முத்தமிட்டு கொண்ட காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: டெல்லி மெட்ரோ ரயில் எந்த நேரத்தில் தொடங்கப்பட்டதோ தொடர்ந்து சர்ச்சைகளாகவே நடக்கிறது. அந்த ரயில் என்ன பாவம் பண்ணுச்சோ என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

பெரும்பாலும் மெட்ரோவில் பயணிப்பதையே மக்கள் விரும்புகிறார்கள். அலுப்பு தெரியாமல் ஏசியில் செல்லலாம் என்பதால் இந்த மெட்ரோவை எல்லாரும் பயன்படுத்துகிறார்கள். டெல்லி மெட்ரோ ரயிலை தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ரயிலில் சில நேரங்களில் சர்ச்சையான சம்பவங்கள் நடக்கின்றன.
ஒரு முறை அரை நிர்வாண உடையில் வந்த ஆண் பயணி ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து பெண் ஒருவர் தனது நிறுத்தம் வந்தவுடன் இறங்குவதற்காக எழுந்தார். பார்த்தால் பிகினி போன்ற உடையை அணிந்திருந்தார். அனைவரது பார்வையும் அவர் மீதுதான் இருந்தது. கீழே அணிந்திருந்த ஆடையில் ஆங்காங்கே ஸ்டைலுக்காக கிழிந்திருந்தது. அது எலி கடித்துவிட்டதா என நெட்டிசன்கள் கிண்டல் செய்தனர்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. ஆடை என்பது தனிப்பட்ட சுதந்திரம் என்றும் பொது இடங்களில் கண்ணியமான ஆடைகளை அணிவதே பாதுகாப்பு என்றும் இரு வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டன. இதையடுத்து டெல்லி மெட்ரோ நிர்வாகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் டீசன்ட்டான ஆடைகளை பயணிகள் அணிந்து வருமாறு கேட்டுக் கொண்டது.

இந்த சர்ச்சை அடங்கிய நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் இந்த டெல்லி மெட்ரோ ரயிலில் பல் தேய்த்து கொண்டே வந்தார். இதற்கு அவர் கூறிய காரணம், ஆபிஸுக்கு தாமதமாகிவிட்டதாம், அதனால் நேரத்தை மிச்சம் செய்ய ரயிலில் பல் துலக்குவதாக தெரிவித்தார். இதெல்லாம் அநியாயம் இல்லையா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். இந்த பரபரப்பு அடங்குவதற்கு தற்போது மீண்டும் ஒரு பிரச்சினை கிளம்பிவிட்டது.
டெல்லி மெட்ரோ ரயிலில் வீடியோ எடுக்கக் கூடாது , ரீல்ஸ் செய்யக் கூடாது என நிர்வாகம் பல முறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனினும் யாரும் கேட்பதே இல்லை. அதற்கு முத்தாய்ப்பாக பெண் ஒருவர் எடுத்த வீடியோ அமைந்துள்ளது. சிகப்பு நிற டீசர்ட், சாம்பல் நிறத்தில் குட்டை பாவாடை அணிந்த படியே பெண் ஒருவர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.
அவர் திடீரென ரீல்ஸ் செய்வதற்காக பஞ்சாபி மொழியில் காகா பாடிய ஷேப் எனும் பாடலை ஒலிக்கவிட்டு அதற்கு நடனம் ஆடினார். இந்த வீடியோவை அவருடைய இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார். அதில் டெல்லி மெட்ரோ ரயிலில் வீடியோ எடுக்கக் கூடாது என எனக்கு தெரியும். இருந்தாலும் முதல்முறையாக எடுத்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ 20 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.

இத்தனை சம்பவங்கள் நடந்திருக்க, டெல்லி மெட்ரோ கார்பரேஷனும் ரயிலில் ரீல்ஸ் வீடியோ எடுக்கக் கூடாது, சமூக பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுள்ள நிலையில் மெட்ரோவில் ஒரு கன்றாவி செயல் நடந்தது. டெல்லி மெட்ரோவுக்கு சாபக் கேடா என தெரியவில்லை. தொடர்ந்து இந்த ரயிலில் வினோத சம்பவங்கள் நடந்து வருகின்றன.
அந்த வகையில் டெல்லி மெட்ரோவில் இளைஞர் ஒருவர் கீழே அமர்ந்திருக்கிறார். அவருடைய மடியில் பெண் ஒருவர் படுத்திருக்கிறார். இருவரும் சிறிது நேரத்திற்கெல்லாம் முத்தமிட்டு கொண்ட காட்சி அங்கிருந்தோரை முகம் சுளிக்க வைத்தது. இத்தனை பேர் பயணிக்கிறார்கள், குழந்தைகள் முதல் மாணவர்கள் இருக்கும் இந்த ரயிலில் இப்படி அநாகரீகமாக நடந்து கொள்கிறோமே தவறான முன்னுதாரணமாக இருக்கிறோமே என்ற அறிவு கொஞ்சம் கூட இல்லாமல் இப்படி நடந்து கொண்டுள்ளனர்.
இதை வீடியோவாக எடுத்த சிலர் டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளனர். மேலும் இது குறித்து அந்த ஜோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதை கூட விடாமல் வீடியோ எடுத்துள்ளாரே என அந்த வீடி்யோ எடுத்த நபர் மீதும் கண்டனங்கள் எழுந்துள்ளது. இந்த வீடியோ பார்த்த நெட்டிசன்கள் சிலர் அந்த பெண்ணுக்கு சிபிஆர் சிகிச்சை கொடுக்கிறார், இதில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து டெல்லி மெட்ரோ நிர்வாகம் மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் பயணிகள் யாரும் இது போன்ற ஆபாச நடவடிக்கைகளில் ஈடுபட்டு மற்ற பயணிகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications