Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துணை முதல்வர் இல்லை! விஜய்க்கு பாஜகவின் மெகா ஆஃபர்? எடப்பாடி தயங்குவது ஏன்? பின்னணியில் 3 காரணங்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: என்டிஏ கூட்டணியில் இணைந்தால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்றும் எதிர்க்கட்சித் தலைவர் விஜய் என்றும் தவெகவுக்கு புதிய ஆஃபர்கள் கொடுக்கப்படும் என டெல்லியில் பாஜக பேரம் பேசுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் விஜய் அடிபணிந்தால் இதன் மூலம் யாருக்கெல்லாம் சிக்கல் என்பதை பார்க்கலாம்.

தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நிலையில், பாஜகவோ டெல்லியில் விஜய்யிடம் கூட்டணி பேரம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விவாகரத்தில் விசாரணைக்காக விஜய் டெல்லி சென்றுள்ளார்.

nda alliance

தமிழகத்தில் என்டிஏ கூட்டணியில் வலிமை வாய்ந்த கட்சிகள் இல்லை என பாஜக கருதுகிறதாம். இதனால் அதிக வாக்கு வங்கியையும் ரசிகர்களையும் வைத்துள்ள விஜய்யை தங்கள் கூட்டணிக்கு இழுக்க இந்த பேரம் பேசப்படுகிறதாம்.

அதில் "என்டிஏ கூட்டணி வென்றால் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் என்றும் எதிர்க்கட்சித் தலைவராக நீங்கள் (விஜய்) செயல்படுங்கள்" என பாஜக பேரம் பேசி வருகிறதாம். அதாவது 2011 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக, அதிக இடங்களில் வென்று விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார். அது போன்ற ஒன்றைதான் பாஜக இப்போது கொண்டு வரப்பார்க்கிறதாம்.

விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வருவதில் எடப்பாடி பழனிசாமிக்கு சிறிதும் விருப்பமில்லையாம்.

எடப்பாடி தயங்குவது ஏன்

1.விஜய் என்டிஏ கூட்டணியில் வந்தால், அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும். அல்லது முக்கிய அமைச்சர் பதவிகளை விட்டுத் தர வேண்டிய நிலை வரும், இதனால் அதிமுகவில் அதிருப்தியை எடப்பாடி சம்பாதிக்கக் கூடும். மேலும் துணை முதல்வர் பதவி, அமைச்சர் பதவி- இவை எல்லாம் கூட்டணி ஆட்சி என்பதை குறிக்கும்.

2. அண்மையில் நடந்த ஒரு கூட்டத்தில் அதிமுக தீர்மானத்தில், கூட்டணி கட்சிகளை அதிமுகதான் தேர்வு செய்யும் என குறிப்பிப்பட்டிருக்கிறது. தற்போது டிடிவி தினகரனை பாஜக கொண்டு வந்துள்ளது. அது போல் தவெகவையும் பாஜக கொண்டு வந்தால் அந்த தீர்மானம் நீர்த்து போய்விடும்.

3. விஜய் கட்சிக்கு 50 முதல் 60 இடங்கள் வரை ஒதுக்க வேண்டியிருந்தால், அதிமுகவின் பல மாவட்டச் செயலாளர்கள் போட்டியிட வாய்ப்பில்லாமல் போகும். இது கட்சிக்குள் கலகத்தை உருவாக்கலாம்.

தவெகவுக்கான சாதக பாதகங்கள்

த.வெ.க-வுக்கு ஏற்படும் விளைவுகள்

விஜய்க்கு இது முதல் தேர்தல் என்பதால், கூட்டணி முடிவு அவரது அரசியல் எதிர்காலத்தையே தீர்மானிக்கும்.

பாதுகாப்பு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற மத்திய அமைப்புகளின் நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க இது ஒரு கேடயமாக அமையலாம். மேலும், தேர்தலுக்கான பூத் கமிட்டி வேலைகளில் அனுபவம் வாய்ந்த அதிமுக, பாஜக தொண்டர்களின் உதவி கிடைக்கும்.

நிச்சயமான வெற்றி: தனித்துப் போட்டியிட்டு வாக்கு சதவீதத்தை நிரூபிப்பதை விட, ஒரு பலமான கூட்டணியில் இருந்து கணிசமான எம்.எல்.ஏ-க்களைப் பெறுவது விஜய்யின் அரசியல் பிம்பத்தை வலுப்படுத்தும்.

விஜய் தனது கட்சியின் கொள்கையாக 'மதச்சார்பற்ற சமூக நீதி'யைக் கூறி வருகிறார். பாஜக-வுடன் இணைந்தால், சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களின் வாக்குகள் பறிபோகும் அபாயம் உள்ளது.

'அரசியல் அடிமை' என்ற முத்திரை: ஆரம்பத்திலேயே சி.பி.ஐ-க்கு பயந்து கூட்டணிக்குச் சென்றார் என்ற விமர்சனம் எழுந்தால், 'மாற்று அரசியல்' என்ற அவரது முழக்கம் கேள்விக்குறியாகும்.

அதிமுக போன்ற பெரிய கட்சியுடன் இணையும்போது, விஜய் இரண்டாம் கட்டத் தலைவராகவே பார்க்கப்படுவார். இது அவரது தனித்துவமான 'ஆளுமை' பிம்பத்தைச் சிதைக்கலாம். கூட்டணியில் இருப்பதால் அதிமுக ஆட்சியின் மக்கள் விரோத திட்டங்களுக்கு விஜயகாந்த் ஆவேசமாக கொடுத்ததை போல் விஜய்யால் குரல் கொடுக்க முடியாத சூழல் ஏற்படும். இப்படி என்டிஏ கூட்டணியில் விஜய் இணைந்தாலோ அதிமுக இணைந்தாலோ இது போன்ற நன்மைகளும் தீமைகளும் உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+