விஜய் Simply Waste.. தவெகவுடன் கூட்டணி இல்லை.. பியூஷ் கோயல் அறிவிப்பு
டெல்லி: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு சில வாரங்களே உள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று 4 முனை போட்டி நிலவி வருகிறது. தவெக-வை தங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இழுப்பதற்கு பாஜக நெருக்கடி கொடுப்பதாக புகார் எழுந்தது. ஜனநாயகன் படம் வெளியிட தடை, கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணை ஆகியவற்றால் விஜய்க்கு அழுத்தம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் மத்திய அமைச்சரும், பாஜக தமிழ்நாடு பொறுப்பாளருமான பியூஷ் கோயல் விஜய் அரசியலால் எந்த தாக்கமும் ஏற்படாது. தவெகவுடன் கூட்டணி இல்லை என்று வெளிப்படையாக கூறியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஆங்கில ஊடகத்திற்கு அளித்துள்ள நேர்காணலில் பியூஷ் கோயல் கூறுகையில், "தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மீது கடுமையான அதிப்தி நிலவி வருகிறது. கற்பனையே செய்து பார்க்க முடியாதளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இதனால் அரசு செயலற்று கிடக்கிறது. உதயநிதி முன்னிலைப்படுத்துவதை தமிழக மக்கள் விரும்பவில்லை. தமிழ் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் அவரின் பேச்சு இருப்பதில்லை. சனாதன தர்மத்திற்கு எதிராக உதயநிதி பேசியதை மக்கள் மறக்க மாட்டார்கள்.

நடிகர்கள் வருவார்கள்.. போவார்கள்..
பொதுவாக தமிழ் மண் நமக்கு சகிப்புத்தன்மை, மாறுபட்ட சிந்தனை, மாறுபட்ட சித்தாங்களை கற்று தரும். திமுக கூட்டணியில் தற்போது ஏராளமான பிரச்சனைகள் எழுந்து வருகின்றன. தேர்தல் கணக்கீடுகளை பார்க்காமல் பிரதமர் நரேந்திர மோடி எல்லா மக்களுக்கும், எப்போதும் திட்டங்களை வழங்கி வருகிறார். அதிமுக - பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி ஆட்சியமைக்கும் என்கிற நம்பிக்கை முழுமையாக உள்ளது.
சினிமா நடிகர்கள் வருவார்கள்.. செல்வார்கள். பல நடிகர்கள் இப்படி வந்து சென்றதை பார்த்துள்ளோம். 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என தெரியவில்லை. ரசிகர் படை இருப்பதும், அதை வாக்காக மாற்றுவதும் சாத்தியமில்லாத ஒன்று. ரசிகர்களுக்கும், வாக்காளர்களுக்கும் வித்தியாசம் உள்ளது.
விஜய் ராஜா இல்லை
அப்படிப்பட்ட நடிகர்கள் பாஜக கூட்டணிக்கு அவசியம் இல்லை. வலுவான இயக்கம், கட்டமைப்பு, மக்களின் பிரச்சனைகளை புரிந்து கொண்டால் தான் நம்பிக்கையான தலைவராக உருவாக முடியும். பல சினிமா நட்சத்திரங்களை பார்த்துவிட்டோம். நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்து எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. விஜய் ராஜா இல்லை. அவர் வாக்குகளை அதிகம் பிரிப்பார். அவ்வளவுதான்.
அவருடன் பாஜக கூட்டணி அமைப்பதற்கான சாத்தியம் இல்லை. அவருடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. கமல்ஹாசன் ஒரு ஏவப்படாத ராக்கெட், விஜய்யால் எந்த தாக்கமும் ஏற்படாது" என்று கூறியுள்ளார். தவெகவை கூட்டணியில் இழுக்க பாஜக நெருக்கடி கொடுப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது தமிழ்நாடு பாஜக பொறுப்பாளரே தவெகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications