இந்தியாவின் நம்பர் 1 நடிகராக உயர்ந்த விஜய்.. வெளியான பட்டியல் - இந்தியை தட்டிதூக்கிய தமிழ், தெலுங்கு
டெல்லி: ஆர்மேக்ஸ் மீடியா என்ற நிறுவனம் வெளியிட்டு இருக்கும் இந்தியாவின் பிரபலமான நடிகர்கள் பட்டியலில் தமிழ் நடிகர் விஜய் முதலிடம் பிடித்து இருக்கிறார்.
ஆர்மேக்ஸ் மீடியா என்ற நிறுவனம் ஜூன் மாதத்திற்கான பிரபலமான 10 நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
இதில் பெரும்பாலும் பாலிவுட் சினிமா நடிகர்களை விட தமிழ், தெலுங்கு, கன்னட சினிமா நடிகர்களே முன்னிலை வகித்து உள்ளனர்.

நடிகர் விஜய் முதலிடம்
சிறந்த நடிகர்களுக்கான இந்த பட்டியலில் இந்திய அளவில் நடிகர் விஜய் முதலிடம் பிடித்து இருக்கிறார். அண்மையில் இவர் நடித்த பீஸ்ட் திரைப்படம் சரியான வரவேற்பை பெறாவிட்டாலும், எப்போதும் சமூக வலைதளங்களில் இவர் குறித்த பேச்சுக்களுக்கு பஞ்சம் இருக்காது. பீஸ்ட் படத்தின் அரபி குத்து பாடல், அடுத்து இவர் நடித்து வரும் வாரிசு திரைப்படம், நடிக்கப்போகும் லோகேஷ் கனகராஜ் படம் போன்றவை தொடர்ந்து சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

2ம் இடத்தில் பிரபலாஸ்
தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவராக இருந்த நடிகர் பிரபாஸ், ராஜமௌலி இயக்கிய பாகுபலி பாகம் 1 மற்றும் பாகுபலி 2ம் பாகங்களில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகராக உருவெடுத்தார். அதன் பின்னர் இவர் நடித்த சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய திரைப்படங்கள் வெற்றிபெறவில்லை. ஆனால், அடுத்து கேஜிஎப் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கும் படத்தில் இவர் நடித்து வருவதன் மூலம் இவர் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

யாஷ் என்னும் ராக்கி பாய்
இந்திய அளவில் கவனம் பெறாமல் இருந்த கன்னட சினிமாவை சர்வதேச அரங்கில் புகழ்பெற வைத்த பெருமைக்குரிய கேஜிஎப் -1 மற்றும் கேஜிஎப் - 2 ஆகிய திரைப்படங்களில் நடித்த யாஷ் இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்து வருகிறார். மாஸான பஞ்ச் டயலாக், சண்டை காட்சிகள், நடிப்பு போன்றவற்றால் இந்திய ரசிகர்களின் மனம் கவர்ந்த யாஷ் என்றுமே சமூக வலைதளத்தில் டிரெண்டிங் முகமாக ஜொலிக்கிறார்.

புஷ்பா, RRR
அண்மையில் தெலுங்கு சினிமாவில் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற 2 படங்கள் புஷ்பா மற்றும் RRR. இதன் வெற்றி காரணமாக அதில் நடித்த நாயகர்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்து உள்ளார்கள். புஷ்பா திரைப்படத்தில் நடித்த அல்லு அர்ஜுன் இந்த பட்டியலில் 4 வது இடத்திலும், RRR படத்தில் நடித்த ஜூனியர் என்.டி.ஆர். இந்த பட்டியலில் 5 வது இடத்திலும், ராம் சரண் 9 வது இடத்திலும் உள்ளனர்.

அஜித், சூர்யா
இந்த பட்டியலில் தமிழ் நடிகர் அஜித் 8 வது இடத்தை பிடித்து இருக்கிறார். வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாவிட்டாலும், அஜித்தின் ரசிகர் பட்டாளம் காரணமாக அவர் எப்போதும் பிரபல நடிகராகவே திகழ்கிறார். சூரரை போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்திருக்கும் நடிகர் சூர்யா இந்த பட்டியலில் 10 வது இடத்தில் இருக்கிறார்.
Recommended Video

பரிதாப நிலையில் பாலிவுட்
இந்த பட்டியலில் ஒரேயொரு பாலிவுட் நடிகர் மட்டுமே இடம்பெற்றுள்ளார். அது அக்ஷய் குமார். பாலிவுட் சினிமாக்கள் தொடர் தோல்வியை தழுவ தென்னிந்திய சினிமாக்கள் பெறும் வெற்றியை பெற்று வருவதை இந்த பட்டியல் காட்டுகிறது. அக்ஷய் குமார் அண்மையில் நடித்த சாம்ராட் பிருத்விராஜ் திரைப்படம் தோல்விடைந்தாலும் அவர் குறித்த அரசியல் கருத்துக்களால் பிரபலமான முகமாக அறியப்படுகிறார். அவருக்கு அடுத்த இடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே -
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்?











Click it and Unblock the Notifications