காஷ்மீர் தீவிரவாதிகளை அலறவிட்ட விஜய் குமார் ஐபிஎஸ் டெல்லிக்கு பணியிட மாற்றம்.. மத்திய அரசு உத்தரவு
டெல்லி: காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்குப் பதற்றமான ஒரு சூழல் நிலவியது. அங்குப் பதற்றத்தைக் கட்டுப்படுத்தி, அமைதியைக் கொண்டு வர எடுக்கப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கைகளை முன்னின்று எடுத்தவர் விஜய் குமார் ஐபிஎஸ்.. இதற்கிடையே விஜய் குமார் ஐபிஎஸ்ஜ காஷ்மீரில் இருந்து டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்தது. இது தொடர்பான மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் அங்குப் பதற்றமான சூழல் நிலவியது. பல மாதக் கணக்கில் கூட போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது. இதனால் அங்கு நிலைமையைச் சமாளிக்க மத்திய அரசு பல முக்கிய அதிகாரிகளை அங்கு அனுப்பியது.
விஜய் குமார் ஐபிஎஸ்:
அப்படி காஷ்மீரில் கொந்தளிப்பான காலகட்டம் நிலவிய போது அங்குச் சென்றவர் ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார். ஐபிஎஸ் அதிகாரியான விஜய் குமார் ஏடிஜிபி பொறுப்பில் காஷ்மீரில் பணியாற்றி வந்தார். காஷ்மீரில் பதற்றத்தைத் தணித்து மீண்டும் அமைதியைக் கொண்டு வந்ததில் இவருக்கு மிக முக்கிய பங்கு உள்ளது. அதன்படி காஷ்மீர் போலீசாரின் முகமாகவே கடந்த சில ஆண்டுகளாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காஷ்மீரில் இருந்து அவர் டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் பணியிட மாற்ற உத்தரவு பெற்ற நான்கு ஐபிஎஸ் அதிகாரிகளில் விஜய் குமாரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அருணாச்சல பிரதேசம்-கோவா-மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் (AGMUT) கேடரின் டெல்லி பிரிவில் பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியிட மாற்றம்:
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "விஜய் குமார், ஐபிஎஸ் (AGMUT:1997), கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல், ஜனவரி 31ம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் AGMUT கேடரின் டெல்லி பிரிவில் தனது புதிய பணியை ஏற்கிறார்" என்று கூறப்பட்டுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி ஆனந்த் ஜெயின் என்பவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் ஜம்மு மண்டல கூடுதல் காவல்துறை இயக்குநராக இருந்த ஆனந்த் ஜெயின், இப்போது ஜே & கே ஆயுதப்படை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனந்த் ஜெயினுக்கு பதிலாக பீம் சென்துட்டி ஐபிஎஸ், ஜம்மு மண்டலத்தின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் (ஐஜிபி) ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
உயரிய விருது:
காஷ்மீரில் தீவிரவாத செயல்களைக் கட்டுப்படுத்தியதில் விஜய குமாருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமர்நாத் யாத்திரையைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த சூழலில், அதைத் தடுப்பதில் விஜய் குமார் முக்கிய பங்கு வகித்தார். இதற்காக அவரை கவுரவிக்கும் விதமாக 2025ம் ஆண்டு குடியரசு தினத்தில் பதக்கம் வழங்கப்பட்டது.
மேஜர் முடிவுகள்:
மேலும், தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோரின் சடலங்களைச் சொந்த கிராமத்திலேயே புதைக்கும்போது, அது அங்கு இருப்போருக்குத் தவறான முன்னுதாரணம் ஆகிவிடுவதால் அதைக் கடுமையாக எதிர்த்தார். இதனால் 158 தீவிரவாதிகளின் உடல், அவர்கள் சொந்த ஊரில் இல்லாமல் மலையடிவாரத்தில் புதைக்கப்பட்டது..
அதேபோல 2021 செப்டம்பரில் ஸ்ரீநகரில் உயிரிழந்த தீவிரவாதி சையத் அலி ஷா கிலானி உடலை எப்படி எங்கே அடக்கம் செய்யலாம் என்ற விரிவான ஜி-திட்டத்தையும் விஜய் குமார் தான் வகுத்தார். சட்டம்-ஒழுங்கு பிரச்சனையைத் தவிர்க்க இரவில் வீட்டின் அருகிலேயே சையத் அலி ஷா கிலானி உடல் புதைக்கப்பட்டது.
விஜய் குமாரின் தலைமையின் கீழ், ரியாஸ் நாய்கூ, காரி யாசிர், ஹைதர் மற்றும் புர்ஹான் கோகா போன்ற உயர்மட்ட தீவிரவாதிகளைக் காஷ்மீர் போலீசால் கொல்ல முடிந்தது. மேலும், ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் ஜே & கே விடுதலை முன்னணி உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் மீதும் தடை விதிக்கப்பட்டன..
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications