எவ்ளோ அசால்ட் பாருங்க.. “நாங்கதான் தப்பி ஓடியவர்கள்” வீடியோ வெளியிட்ட லலித் மோடி, விஜய் மல்லையா!
டெல்லி: இந்தியாவில் பொருளாதார குற்றங்கள், நிதி மோசடியில் ஈடுபட்டுவிட்டு நாட்டை விட்டு தப்பியோடிய தொழில் அதிபர் விஜய் மல்லையா மற்றும் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி ஆகிய இருவரும் பார்ட்டி ஒன்றில் ஒன்றாக பங்கேற்றுள்ளனர். அப்போது வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள லலித் மோடி, நாங்கள் இருவரும் தப்பி ஓடியர்கள் என இந்திய விசாரணை முகமைகளுக்கு சவால் விடுக்கும் வகையில் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா. கிங் பிஷர் விமான நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை தொடங்கிய விஜய் மல்லையா தற்போது இந்தியாவை விட்டு தப்பி ஓடி லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார்.

விஜய் மல்லையா - லலித் மோடி
இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு, தப்பி ஓடியிருக்கும் விஜய் மல்லையாவை நாடு கடத்துவதற்கான சட்டப்பூர்வ முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது. விஜய் மல்லையாவுக்கு எதிராக சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
எனினும், விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்தபடி, இங்கிலாந்தில் சுற்றி வருகிறார் விஜய் மல்லையா. அதேபோல, ஐபிஎல் கிரிக்கெட் தொடரை முதன் முதலில் தொடங்கியவரான லலித் மோடியும் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு நட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார். கடந்த 2010ல் நாட்டை விட்டு வெளியேறிய லலித் மோடி, தற்போது வரை லண்டனில் உள்ளார்.
நாடு கடத்த முயற்சி
லலித் மோடிக்கு எதிராகவும் இந்தியாவில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு நடைபெற்று வருகிறது. எனினும், இந்தியாவுக்கு வர மறுத்து பிரிட்டனில் தங்கியுள்ளார். அவ்வப்போது லலித் மோடியும் விஜய் மல்லையாவும் லண்டனில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க செல்லும் வீடியோக்களை தங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்தியாவில் நிதி மோசடிகளில் ஈடுபட்டு விட்டு தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையா உள்ளிட்டோரை உடனடியாக நாடு கடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
சிரித்துக்கொண்டே வீடியோ
இந்த நிலையில், இந்தியாவை சீண்டும் விதமாக லலித் மோடி தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். லண்டனில் நடைபெற்ற விஜய் மல்லையாவின் பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்ற லலித் மோடி, விஜய் மல்லையாவுடன் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய லலித் மோடி, "நாங்கள் தப்பி ஓடியவர்கள்.. இந்தியாவின் மிகப்பெரிய தப்பி ஓடியவர்கள்" என்று சிரித்துக்கொண்டே கூறும் வீடியோவை பகிர்ந்துள்ளார். "இணையத்தை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் ஒன்றை நான் செய்ய உள்ளேன். உங்களுக்காக மக்களே.. பொறாமையால் மனம் புழுங்காதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன்கள் கடும் கண்டனம்
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களுடன் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். நெட்டிசன்கள் கூறுகையில், "இந்திய அரசாங்கத்தை கேலி செய்யும் வகையில் இவர்களின் வீடியோ உள்ளது" என்று பதிவிட்டுள்ளனர். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "உங்களால் எல்லாம் இணையம் ஸ்தம்பிக்காது பேசாமல் உட்காருங்கள்" என பொருள் படும் வகையில் பதிவிட்டு இருந்தார்.
"இந்திய சட்டத்திற்கு இது அவமானம்.. இப்படி ஒரு வீடியோவை எடுக்க அவர்களுக்கு தைரியம் வந்துள்ளது. இந்தியாவின் சிபிஐ / அமலாக்கத்துறையை பார்த்துதான் சிரிக்கிறார்கள்" என்று பதிவிட்டுள்ளனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications