Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் பொங்கலன்று ரிலீஸ் ஆகாது.. உச்ச நீதிமன்றத்தில் இருந்து வந்த முக்கிய அப்டேட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படம் சென்சார் சான்றிதழ் விவகாரம் காரணமாக ரிலீஸ் ஆகாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே படத்திற்கு சென்னை உயர் நீதி​மன்றத்தின் இடைக்​கால தடையை நிறுத்தி வைக்க வேண்​டும் என்​று கோரி படக்குழு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு ஜனவரி 19ம் தேதியே விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

முழு நேர அரசியலுக்கு வந்துவிட்ட விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன். இந்தப் படத்தைக் கடந்த ஜனவரி 9ம் தேதியே ரிலீஸ் செய்யத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது. அதை மையமாக வைத்தே புரமோஷன் பணிகளும் நடந்து வந்தது. இந்தச் சூழலில் தான் கடைசி நேரத்தில் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பட வெளியீடு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Jana Nayagan Vijay Supreme court

ஜனநாயகன்

முதலில் ஜனநாயகன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்குவதாகக் கூறிய தணிக்கை வாரியம், பிறகு திடீரென மறுஆய்​வுக்கு அனுப்​பியதாக தயாரிப்பு நிறுவனம் குற்றஞ்சாட்டுகிறது.. இதை எதிர்த்துப் படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசா​ரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, மறு ஆய்வுக் குழு​வுக்கு பரிந்​துரை செய்த தணிக்கை வாரியத்தின் உத்தரவை ரத்து செய்தார். மேலும் படத்திற்கு உடனடியாக சென்சார் சான்றிதழ் வழங்குமாறும் உத்தரவிட்டார்.

இருப்பினும், இந்த உத்​தரவை எதிர்த்து தணிக்கை வாரி​யம் மேல்​முறையீட்டு செய்தது. மேல்முறையீட்டு மனுவை விசா​ரித்த சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி வாஸ்​தவா தலை​மையி​லான அமர்​வு, தனி நீதிபதி உத்தரவுக்குத் தடை விதித்​தது. சென்சார் சான்றிதழ் இல்லாமலேயே பட வெளியீட்டுத் தேதியை அறிவித்தது ஏன் என்றும் பட தயாரிப்பு நிறுவனத்திற்குக் கேள்வி எழுப்பியது. மேலும், மேல்​முறை​யீட்டு வழக்கை ஜனவரி 20-ம் தேதிக்குத் தள்ளி வைத்​தது.

சோகம்

ஜனவரி 9ம் தேதி படம் வெளியாகாத போதே விஜய் ரசிகர்கள் சோகமடைந்தனர். இதனால் எப்படியாவது படத்தைப் பொங்கலுக்குள் வெளியிட வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இதன் காரணமாகவே உடனடியாக ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்தச் சூழலில் வழக்கு 20ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

எப்போது விசாரணை?

இந்தச் சூழலில் தான் தயாரிப்பு நிறு​வனம் சார்பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதி​மன்றத்தின் இடைக்​கால தடையை நிறுத்தி வைக்க வேண்​டும் என்​று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே இந்த வழக்கில் தங்​கள் தரப்பு கருத்தைக் கேட்ட பிறகே உத்​தர​வை பிறப்​பிக்க வேண்​டும் என்று கோரி தணிக்கை வாரி​யத்​தின் வழக்​கறிஞர் அம்​ரீஷ் குமார் நேற்றைய தினம் கேவியட் மனுவைத் தாக்​கல் செய்​துள்​ளார்.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்றைய தினம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. இதற்கிடையே சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணை தொடர்பான உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் 19ம் தேதிக்கான பட்டியலில் இந்த வழக்கும் இடம்பெற்றுள்ளது. இதனால் அடுத்த வாரம் திங்களன்றே இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதனால் படம் பொங்கலன்று ரிலீஸ் ஆக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கடைசி சான்ஸ்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தி உள்ளார். இதில் விஜய்யோடு இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அரசியலில் நுழைந்துவிட்ட விஜய், 2026 சட்டசபைத் தேர்தலில் அவர் போட்டியிட இருக்கிறார். இதற்காகப் பிரச்சாரத்திலும் அவர் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் அவர் நடிப்பிற்கு முழுமையாக முழுக்கு போட இருக்கிறார். அவரது கடைசி படமாக ஜனநாயகன் உருவாகியுள்ளதால் தமிழ்நாடு முழுக்க எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+