விக்ரம்... விக்ரம்...வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட்
ஸ்ரீஹரிகோட்டா: இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் விக்ரம்- எஸ் இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்திய தனியார் விண்வெளித் துறையின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக, விக்ரம்-எஸ் என்ற நாட்டின் முதலாவது தனியார் ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று காலை விண்ணில் ஏவப்பட உள்ளது. மத்திய அரசின் விண்வெளி துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி முகாமையான இன்-ஸ்பேஸ் (இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம்) இதற்கான அங்கீகாரத்தை வழங்கியது.

இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தைச் சேர்ந்த புத்தொழில் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் தயாரித்துள்ள இந்த ராக்கெட் இன்று காலை மணி 11- நண்பகல் மணி 12 இடையே விண்ணில் செலுத்தப்படும். 'பிராரம்ப்' திட்டத்தின்கீழ் தனியார் துறையினரால் வடிவமைக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்ட ராக்கெட்டை ஸ்கைரூட் நிறுவனம் முதன்முறையாக இந்தியாவிலிருந்து விண்ணிற்கு அனுப்புகிறது.
முப்பரிமாண அச்சு உபகரணங்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் விக்ரம்-எஸ் ராக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளது. ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, பஜூம்க் ஆர்மீனியா, என்-ஸ்பேஸ் டெக் இந்தியா ஆகிய மூன்று செயற்கை கோள்களை இந்த ராக்கெட் சுமந்து செல்லும்.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த இன்-ஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பவன் கே. கோயங்கா, "விண்வெளி துறையை ஊக்குவிக்கவும், தனியார் துறையினரின் பங்களிப்பிற்கு ஏதுவாகவும், அரசு மேற்கொண்டு வரும் கொள்கைகளின் காரணமாக இந்திய விண்வெளித் துறை பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் வகையில் ஸ்கைரூட் நிறுவனத்தின் முதல் திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பது, மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது", என்று கூறினார்.
கடந்த ஆறு மாதங்களில், இந்தியாவில் விண்வெளி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அரசு அல்லாத நான்கு அமைப்புகளுக்கு இன்-ஸ்பேஸ் நிறுவனம் அதிகாரம் அளித்துள்ளது. விண்வெளி பணிகளில் ஈடுபடுவதற்காக இந்தத் துறை சார்ந்த அரசு அல்லாத அமைப்புகளிடமிருந்து இன்-ஸ்பேஸ் நிறுவனத்திற்கு இதுவரை 150 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications