அம்பாசிடர் கார் நினைவிருக்கா? மீண்டும் வருதாம்... அதுவும் எலெக்ட்ரிக்கில் - சென்னையில் உற்பத்தி
டெல்லி: 90s கிட்ஸ்களின் நீங்காத நினைவுகளில் இடம்பெற்றிருக்கும் அம்பாசிடர் கார்களை மீண்டும் எலெக்ட்ரிக் வாகனங்களாக தயாரித்திட இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வந்த அம்பாசிடர் கார்களில் ஒன்று இரண்டு தற்போது சாலைகளில் ஓடுகின்றன. இன்றைய 2k கிட்ஸ்களுக்கு அம்பாசிடர் கார் என்றாலே என்னவென்று தெரியுமா என்பது கேள்விக்குறி.
ஆனால், சில 10 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் எந்தவிதமான போட்டியும் இன்றி தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்தது இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அம்பாசிடர் கார்தான்.

பிரதமர் தொடங்கி டிரைவர் வரை...
அன்றைய பிரதமர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் தொடங்கி சாதாரண கார் ஓட்டுநர் வரை அனைவரும் பயன்படுத்தியது அம்பாசிடர் காரைதான். கம்பீரமான, வலிமையான தோற்றத்தால் எவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டாலும் உள்ளே இருப்பவர்களுக்கு பெரியளவில் காயங்கள் ஏற்படாத அளவுக்கு பாதுகாப்பை அம்பாசிடர் கார் தரும் என அதை பயன்படுத்தியவர்கள் கூற நாம் கேட்டிருப்போம். எங்கு சென்றாலும் ஒரே மாதிரி வெள்ளை நிறத்தில் சாலையை ஆக்கிரமித்து இருக்கும் அம்பாசிடர் கார்கள் பலருக்கு மலரும் நினைவுகளாக மாறிவிட்டன.

நின்ற உற்பத்தி
காலப்போக்கில் வெளிநாட்டு கார்களின் வருகை, ஆட்டோ மொபைல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் தங்களை தகவமைத்துக் கொள்ளாததால் அம்பாசிடர் காரால் போட்டியை சமாளிக்க முடியவில்லை. இதனால் அதனை வாங்கி பயன்படுத்தும் ஆர்வம் பின் வந்த தலைமுறைக்கு குறைந்து போனது. இதனால் அம்பாசிடர் கார் உற்பத்தியையே இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் நிறுத்தியது.

மீண்டும் அம்பாசிடர்
அவ்வப்போது சமூக வலைதளங்களில் சிலர் புதிதாக வடிவமைக்கப்பட்ட அம்பாசிடர் கார்களின் புகைப்படங்களை பகிர்ந்து மீண்டும் அம்பாசிடர் வருகிறது என்ற பதிவிடுவார்கள். ஆனால், அனைத்தும் வதந்திகளாகவே நின்றுவிட்டன. இந்த நிலையில்தான் மீண்டும் அம்பாசிடர் கார்களை அறிமுகம் செய்ய இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

எலெக்ட்ரிக் கார்
இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் அம்பாசிடர் கார்களை எரிபொருள் இன்றி எலெக்ட்ரிக் வாகனங்களாக தயாரிக்க இந்துஸ்தான் மோட்டார்ஸ் பரிசீலித்து வருகிறதாம். இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையேற்றம் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் தேவை அதிகரித்து வருவதை உணர்ந்த இந்துஸ்தான் மோட்டார்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

2 ஐரோப்பிய நிறுவனங்கள்
இது தொடர்பாக எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யும் 2 ஐரோப்பிய நிறுவனங்களுடன் இந்துஸ்தான் மோட்டார்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தொடக்கத்தில் இரு சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கவே இந்துஸ்தான் மாட்டார்ஸ் விரும்பியதாகவும், அதன் பிறகே பழைய அம்பாசிடரை மறு அறிமுகம் செய்ய திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இந்துஸ்தான் மோட்டார்ஸ் மீண்டும் கலக்கும் என்று நம்பப்படுகிறது.

சென்னையில் உற்பத்தி
இதில் மற்றுமொரு முக்கிய தகவல் என்னவென்றால், எலெக்ட்ரிக் அம்பாசிடர் கார் சென்னையில் உள்ள இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஆலையில் தயாரிக்கப்பட உள்ளதாம். இந்த ஆலையில் இதற்கு முன்னதாக மிட்சுபிசி கார்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. கடைசியாக தயாரிக்கப்பட்ட அம்பாசிடர் கடந்த 2014 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications