மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை.. இரு குழுக்கள் மோதலில் 8 பேர் பலி! பதற்றம் அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

இம்பால்: மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 8 பேர் உயிரிழந்துள்ளது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் இந்த சண்டை ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், வன்முறை மேலும் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு குக்கி மற்றும் மெய்தி இன மக்கள் இடையே பயங்கர வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறை காரணமாக 300-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். நிலமையை கட்டுப்படுத்த அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.

Violence Erupts Again in Manipur 8 Killed in Clash Between Two Groups

2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் பதற்றம் அங்கு நிலவிய நிலையில், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதன்பிறகு நிலமை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதி ஆட்சி திரும்ப பெறப்பட்டது. இதையடுத்து முதல்வராக யும்னம் கெம்சந்த் சிங் பதவியேற்றுள்ளார். இருந்தாலும் அவ்வப்போது வன்முறைகள் எழுவதும், போலீசாரின் நடவடிக்கைக்கு பிறகு கட்டுப்படுவதும் என பதற்றமான நிலையே அங்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த சூழலில்தான், மணிப்பூரில் உள்ள உக்ருல் மாவட்டத்தில் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 8 பேர் பலியாகியுள்ளனர். கம்ஜோங் மற்றும் உக்ருல் மாவட்டங்களில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் நேற்று இரவு பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக இரு குழுக்கள் இடையேயும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய குழுக்கள் இடையே நடைபெற்ற மோதலில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

குக்கி மற்றும் நாகா ஆயுத குழு இடையே ஏற்பட்ட மோதலில் இந்த உயிர் பலிகள் ஏற்பட்டுள்ளன. 10 வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. நிலமை கட்டுக்காடங்கமல் செல்லும் சூழல் ஏற்பட்டதால் உடனடியாக அங்கு தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது. பிஎன்.எஸ் சட்டப்பிரிவு 162 கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி 5 பேர் அல்லது அதற்கு மேல் மக்கள் ஒன்றாக கூடுவதற்கு தடையாணை விதிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூரில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மணிப்பூரில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள சூழலில், அங்கு நிலவி வரும் பதற்றமான சூழல் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+