டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாகிஸ்தான் விமானத்தை துல்லிய தாக்குதல் நடத்தி வீழ்த்திய அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது

கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் போர் விமானத்தை வீரர் அபிநந்தன் மிக் 21 ரக விமானத்தில் விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்தினார். வீரச்செயல் புரிந்த அபிநந்தனுக்கு வீர் சக்ரா வ

Google Oneindia Tamil News

டெல்லி: பாகிஸ்தானுக்கு எதிரான துல்லிய தாக்குதலின்போது தீரத்துடன் போராடி விமானத்தை சுட்டு வீழ்த்திய தமிழகத்தைச் சேர்ந்த கமாண்டர் அபிநந்தனுக்கு இன்று வீர் சக்ரா விருது வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார். டெல்லியில் நடைபெற்ற எளிமையான விழாவில் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தன், இந்திய விமானப்படையில் விங் கமாண்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் ஊடுருவி தீவிரவாத முகாம்களை அழித்தன.

Vir Chakra awarded for Abhinandan who shot down a Pakistani plane with precision

கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் போர் விமானத்தை வீரர் அபிநந்தன் மிக் 21 ரக விமானத்தில் விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்தினார். இந்த தாக்குதலின்போது பாகிஸ்தான் பகுதிக்குள் அபிநந்தன் சென்ற விமானம் விழுந்தது.

தரமான சம்பவம்..! பால்கோட் ஹீரோ அபிநந்தன் குரூப் கேப்டனாக பதவி உயர்வு .. இந்தியா விமானப்படை உத்தரவுதரமான சம்பவம்..! பால்கோட் ஹீரோ அபிநந்தன் குரூப் கேப்டனாக பதவி உயர்வு .. இந்தியா விமானப்படை உத்தரவு

பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட அபிநந்தன் பின்னர், மத்திய அரசின் முயற்சியால் உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்டார்.

Vir Chakra awarded for Abhinandan who shot down a Pakistani plane with precision

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்து அந்நாட்டின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக அபிநந்தன் இடம்பெற்றுள்ள விமானப்படையின் 51வது படைப்பிரிவை பாராட்டி குழு விருது வழங்கப்பட்டது. இதையடுத்து அபிநந்தனுக்கு அவரது வீரத்தை பாராட்டி வீர் சக்ரா விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ராணுவ கமாண்டர் அபிநந்தன், குழு கேப்டனாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.

Vir Chakra awarded for Abhinandan who shot down a Pakistani plane with precision

இந்தநிலையில் அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அபிநந்தனுக்கு இன்று வீர் சக்ரா விருது வழங்கி கவுரவித்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் எளிமையாக நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்று கரஒலி எழுப்பி பாரட்டு தெரிவித்தனர்.

English summary
President Ramnath Kovind today conferred the Vir Chakra award on Commander Abhinandan, who shot down a plane while fighting off the coast during a precision strike against Pakistan. Abhinandan was presented with the Vir Chakra Award at a simple ceremony in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X