டெல்லியில் பெண் போல உடை அணிந்து.. பேருந்தில் பயணித்த இளைஞர்.. ஓ இது தான் காரணமா.. குபீர் வீடியோ
டெல்லி: தலைநகர் டெல்லியில் இலவச பஸ் பயணத்திற்காக ஆண் ஒருவர் பெண் வேடமிட்டுப் பயணித்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகர பேருந்துகளில் ஒரு மாதத்தில் பெண்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாகப் பயணிக்கலாம்.

தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்குக் கடந்த 2019ஆம் ஆண்டு முதலே பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் கடந்த புதன்கிழமை பேருந்தில் இலவசமாகப் பயணிக்க இளைஞர் ஒருவர், பெண் வேடமிட்டு பேருந்தில் பயணிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Delhi Free DTC bus services for Female .😄😄😄1/2 pic.twitter.com/RIzjXpfsiW
— Akhand Bharat (@Rajivan22291838) March 23, 2022
அதில் ஷால் மற்றும் மாஸ்க் அணிந்து, பெண் போல உடை அணிந்து வந்த இளைஞர் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் அமர்கிறார். அந்த நபரைச் சந்தேகித்து நடத்துநர், மாஸ்கை கழற்றச் சொன்னார். இருப்பினும், முதலில் அந்த நபர் மாஸ்கை கழற்ற மறுக்கிறார்.
தொடர்ந்து நடத்துநர் மாஸ்க்கை கழற்ற வலியுறுத்தவே, பெரும் தயக்கத்துடன் அந்த நபர் மாஸ்கை கழற்றுகிறார். மேலும், வீடியோ முழுவதும் அந்த இளைஞர் நடத்துநரிடம் தொடர்ந்து சாரியும் கேட்டுக் கொண்டே வருகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications