விடாத பிடுங்கு.. நல்லா தூக்கிப் போடு.. பச்சையா மஞ்சளா.. உங்களுக்குப் பிடிச்சது யாருனு சொல்லுங்க!

வாலிபால் விளையாடும் பறவைகளின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பறவைகள் இரண்டு அணிகளாக பிரிந்து பந்து விளையாடும் ஆச்சர்யமான காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

விலங்குகளின் பல வீடியோக்கள் சமூகவலைதளங்களில் கொட்டிக்கிடக்கின்றன. அதில் பல நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கும். அந்த வகையில் தான் தற்போது ஒரு வீடியோ வைரலாகியுள்ளது.

Viral video of birds playing volleyball

சம்பந்தப்பட்ட அந்த வீடியோவில் நான்கு குட்டி கிளிகள் பந்து விளையாடுகின்றன. இரண்டு பச்சை நிறக் கிளிகள் ஓரு புறமும், இரண்டு மஞ்சள் நிறக் கிளிகள் மற்றொரு புறமும் இருக்க, நடுவில் ஒரு வலையை வைத்திருக்கிறார்கள். இரண்டு கிளி அணிகளும் மாற்றி மாற்றி பந்தை தூக்கிப் போட்டு அழகாக வாலிபால் விளையாடுகின்றன.

அதைத்தொடர்ந்து இரண்டு கிளி அணிகளும் கூடைப்பந்து விளையாடுகின்றன. தங்கள் அணிக்கு அதிக புள்ளிகளை சேர்க்கும் நோக்கில் இரு அணி கிளிகளும் போட்டி போட்டு பந்தை தூக்கிக்கொண்டு போய் கூடையில் லாவகமாக போடுகின்றன.

அதிலும் குறிப்பாக மற்ற கிளியிடம் இருக்கும் பந்தை பிடுங்குவதற்காக கிளிகள் இடையே நடக்கும் சண்டை பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருக்கிறது. மஞ்சள் நிறத்தில் உள்ள அந்த பந்து, கிளிகளிடம் சிக்கி சின்னாபின்னமாகிறது.

பந்து விளையாடும் கிளிகளின் வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் ஆச்சரியக் கடலில் மூழ்கியுள்ளனர். ஒவ்வொருவரும் வியந்துபோய் கமெண்ட்டு செய்து வருகின்றனர். இந்த வீடியோ ஆயிரக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது. எவ்வளவு அழகாக இந்தக் கிளிகளுக்கு விளையாட்டைப் பழக்கி உள்ளனர் என கிளிகளின் உரிமையாளர்களைப் பாராட்டி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+