Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போலி வாக்காளர்கள்.. ‛இந்தியா' கூட்டணி எம்பிக்கள் ராகுல் வீட்டில் மீட்டிங்.. பூதாகரமாகும் விவகாரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூர் சென்ட்ரல் லோக்சபா தொகுதியில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதால் தான் பாஜக வென்றது என்று ராகுல் காந்தி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் பாஜகவின் முறைகேடுக்கு தேர்தல் ஆணையம் உடந்தை என்று கடுமையாக குற்றம்சாட்டி உள்ள நிலையில் ராகுல் காந்தி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் ‛இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்களுடன் அவசர மீட்டிங் நடத்தி போலி வாக்காளர்கள் குறித்த விவரங்களை பகிர்ந்தார். இதனால் இந்த விவகாரம் பூதாகரமாக உள்ளது.

டெல்லியில் உள்ள லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் இல்லத்தில் இரவில் திடீரென்று ‛இந்தியா' கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மீட்டிங் நடத்தினர். இந்த மீட்டிங்கை ராகுல் காந்தி தலைமையேற்று நடத்தினார்.

vote-chor-row-india-bloc-leaders-meet-at-rahul-gandhis-residence-in-delhi

இந்திய தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பாஜகவின் வெற்றிக்காக இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், பெயர் சேர்ப்பு உள்ளிட்டவற்றை மேற்கொண்டு முறைகேடு செய்கிறது என்று பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டு 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்பட ‛இந்தியா' கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ராகுல் காந்தி இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மேலும் தனது குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை வீடியோ கான்பரன்சிங் மூலமாக திரையில் காண்பித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் இதுபற்றிய விவாதம் கிளம்பி உள்ளது. இந்நிலையில் தான் இன்று ராகுல் காந்தி, ‛இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்களுடன் அவசர மீட்டிங் நடத்தினார்.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி குழு தலைவர் சோனியா காந்தி, ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) அணியின் தலைவர் சரத் பவார், சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

அதேபோல் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பாரூக் அப்துல்லா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, திருச்சி சிவா, கனிமொழி, கமல்ஹாசன், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அபிசேக் பானர்ஜி உள்பட ‛இந்தியா' கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் பங்கேற்றனர்.

அப்போது ராகுல் காந்தி, இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது முன்வைத்த குற்றச்சாட்டுகளை மீண்டும் வீடியோ கான்பரன்சிங் மூலமாக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விளக்கினார். மேலும் இந்த விவகாரத்தில் பூதாகரமாக்க ‛இந்தியா' கூட்டணி கட்சி எம்பிக்கள் திட்டமிட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+