காமராஜரின் தொடர்ச்சி இது.. தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக ராகுல் காந்தி போட்ட வீடியோ
டெல்லி: தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் ராகுல் காந்தி தமிழக வாக்காளர்களுக்காக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் முக்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ''இந்த தேர்தல் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கும், அதிமுக - பாஜக கூட்டணிக்கும் இடையேயான சித்தாந்த ரிதீயிலான தேர்தல். பாஜக, அதிமுகவை கட்டுப்படுத்தி தமிழ் கலாசாரம், பண்பாடு, மொழியை அழித்து தமிழகத்துக்குள் நுழைய முயல்கிறது. காங்கிரஸ் கட்சியின் மறைந்த காமராஜ் சமூகநீதிக்கான அடிக்கல்லை தமிழ்நாட்டில் நாட்டினார். அதனை திமுக - காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பின்பற்றி வருகிறது. இதனால் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைய உள்ளது. இந்நிலையில் தான், தமிழக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி முக்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் மறைந்த முதல்வர் காமராஜரின் பெயரை கூறி தமிழக மக்களுக்கு முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தி கூறியுள்ளதாவது:
''தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் வணக்கம். இந்த தேர்தல் என்பது திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கும், அதிமுக - பாஜக கூட்டணிக்கும் இடையேயான சித்தாந்த ரிதீயிலான தேர்தல். பாஜக, அதிமுகவை கட்டுப்படுத்தி தமிழ் கலாசாரம், பண்பாடு, மொழியை அழித்து தமிழகத்துக்குள் நுழைய முயல்கிறது. அதிமுக தலைவர்கள் மீதான ஊழல் வழக்குகளால் அவர்கள் பாஜகவுடன் சமசரம் செய்துள்ளனர்.
டிரம்பிடம் எப்படி மோடி சமரசம் செய்து உள்ளாரோ.. அதேபோல் அதிமுக தலைவர்கள் மோடியுடன் சமசரம் செய்துள்ளனர். டெல்லியில் இருந்து அதிமுக வழியாக தமிழகத்தை ஆள பாஜக நினைக்கிறது. எங்களை பொறுத்தவரை தமிழ்நாட்டை தமிழக மக்கள் ஆள வேண்டும். தமிழக பஞ்சாயத்துகள் ஆள வேண்டும். தமிழ்நாடு சட்டசபையால் தமிழக முதல்வர் ஆள வேண்டும்.
தமிழகத்தை எடுத்து கொண்டால் சமூக நீதிக்கான மரபை காலம் காலமாக கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மறைந்த காமராஜ் சமூகநீதிக்கான அடிக்கல்லை தமிழ்நாட்டில் நாட்டினார். அதனை திமுக - காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பின்பற்றி வருகிறது. தமிழக அரசு பெண்கள், இளைஞர்கள், முதியவர்களுக்கு ஆதரவாக உள்ளது.
தயவுசெய்து மக்கள் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு மக்கள் ஓட்டளிக்க வேண்டும். மொத்த காங்கிரஸ் கட்சியினரும், திமுக உள்பட பிற கூட்டணி கட்சியினருக்கு வாக்களிக்க வேண்டும். உதவி செய்ய வேண்டும். அதேபோல் பிற கூட்டணி கட்சியினர் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களித்து உதவ வேண்டும். வணக்கம்'' என்று கூறியுள்ளார்.
-
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,! -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை












Click it and Unblock the Notifications