ராகுல் காந்திக்கு உதவும் தேர்தல் ஆணைய ஊழியர்கள்? வாக்கு திருட்டு விஷயத்தில் அவரே சொன்ன மேட்டர்
டெல்லி: ராகுல் காந்தி வாக்கு திருட்டு தொடர்பாக தேர்தல் ஆணையம் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். டெல்லியில் இன்று நடந்த பிரஸ்மீட்டில் ராகுல் காந்தி பேசும்போது, ‛‛இப்போது எங்களுக்கு தேர்தல் ஆணையத்துக்கு உள்ளே இருந்தே உதவி கிடைக்க தொடங்கி விட்டது'' என்று கூறி பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் 7 ம் தேதி டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது லோக்சபா தேர்தல்,

மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல்களில் பாஜக வாக்குகளை திருடியதாகவும், அதற்க தேர்தல் ஆணையம் உடந்தையாக இருந்ததாகவும்
கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இது பெரும் விவாதத்தை கிளப்பியது.
அதன்பிறகு பீகார் சிறப்பு வாக்காளர் திருத்தத்தை எதிர்த்து ராகுல் காந்தி பேரணி மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சி விரைவில் வாக்கு திருட்டு குறித்த புதிய ஹைட்ரஜன் குண்டை போடும். அதன்பிறகு பிரதமர் மோடியால் நாட்டு மக்களிடம் முகத்தை கூட காண்பிக்க முடியாது என்று கூறியிருந்தார். இதன் தொடர்ச்சியாக தான் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் ராகுல் காந்தி இன்று டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது வாக்கு திருட்டு தொடர்பான தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் சில விஷயங்களை வீடியோ கான்பரன்சிங் மூலமாக பத்திரிகையாளர்களுக்கு காண்பித்தபடி ராகுல் காந்தி கூறியதாவது:
தேர்தலில் நீக்கப்பட்டவர்களின் பெயர் விவரங்களை வழங்காமல் தேர்தல் ஆணையம் இந்தியாவின் ஜனநாயகத்தை கொல்கிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா, உத்தர பிரதேச மாநிலங்களில் வாக்காளர்கள் அதிகளவில் நீக்கப்பட்டுள்ளனர். இந்த ஜனநாயக படுகொலையை தடுக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. இதனால் வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்யப்படும் பெயர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் ஒரு வாரத்துக்குள் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இந்திய மக்களின் உரிமை மற்றும் ஜனநாயகத்தை காக்க வேண்டும். அவருக்கு 100 சதவீதம் புல்லட்ப்ரூப் பாதுகாப்பு வழங்குவேன். இதனால் மகாராஷ்டிரா ரஜூராவில் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் மற்றும் கர்நாடகாவின் ஆலந்த் தொகுதிகளில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை வெளியிட வேண்டும்.
எங்களின் குற்றச்சாட்டை தொடர்ந்து இப்போது தேர்தல் ஆணையத்திற்குள்ளேயே எங்களுக்கு உதவி கிடைக்க தொடங்கிவிட்டது. தேர்தல் ஆணையத்தில் இருந்தே இப்போது எங்களுக்கு தகவல்கள் கிடைக்கின்றன. இது நிற்கப்போவது இல்லை'' என்று கூறியுள்ளார். அதாவது தனது குற்றச்சாட்டுக்கு தேவையான ஆதாரங்களை தேர்தல் ஆணையத்தில் உள்ளவர்களே தருவது போல் அவரது பேச்சு உள்ளது. இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications