அமைதியாக முடிந்தது ஜார்கண்ட் இறுதிகட்ட சட்டசபை தேர்தல்.. 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை
Recommended Video
டெல்லி: ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கான 5வது மற்றும் இறுதி கட்ட தேர்தல், 16 தொகுதிகளுக்கு இன்று நடைபெற்றது. 23ம் தேதி தேர்தல் ரிசல்ட் வெளியாக உள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில், தற்போது, பாஜக ஆட்சி நடைபெறுகிறது. ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில்தான், 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு 5 கட்டங்களாகத் தோ்தல் நடைபெற்றது. முதல்கட்டத் தேர்தல் கடந்த மாதம் 30ம் தேதி நடைபெற்றது.

4ம் கட்ட தேர்தல், கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிலையில் 5வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. 5 தொகுதிகளில் மதியம் 3 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மற்ற 11 தொகுதிகளில் மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
காங்கிரஸ் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான ஜார்க்கண்ட் முக்தி மோர்சா தலைவர் ஹேமந்த் சோரன் உள்பட முக்கிய வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களத்தில் இருந்தனர். ஹேமந்த் சோரன் தும்கா மற்றும் பர்கைட் உள்ளிட்ட இரண்டு தொகுதியில் போட்டியிட்டு உள்ளார்.

இவரை எதிர்த்து பாஜகவின் சிமோன் மால்டோ போட்டியிட்டுள்ளார். இறுதி கட்ட தேர்தல் 1347 வாக்குபதிவு மையங்களில் அமைதியாக நடந்து முடிந்தது. 7006 விவிபாட் மெசின்கள் பயன்படுத்தப்பட்டன. மாலை 4 மணியளவில், பதிவான வாக்குப்பதிவு படி, 63.98 சதவீதம் வாக்குப்பதிவாகியிருந்தது.
81 தொகுதிகள் உள்ள ஜார்க்கண்ட் சட்டசபைக்கு இன்றுடன் தேர்தல் முடிவடைந்த பின்னர் வரும் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications