குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா! உண்மை காரணம் இதுவா?
டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்திருக்கிறார். நீதித்துறைக்கும் இருவருக்கும் ஏற்கெனவே முட்டல் மோதல்கள் அதிகம் இருந்த நிலையில், தன்கர் ராஜினாமா செய்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது. இதற்கான காரணங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றார். ஆனால் இதற்கு முன்னர் வேறு எந்த குடியரசுத் துணைத் தலைவருக்கு எதிராக எழுப்பியதை விட அதிகமான எதிர்ப்பு குரல்கள் இவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இடமிருந்து எழுந்திருந்தது. அப்படி என்ன செய்தார் இவர்?

ஆர் எஸ் எஸ் தொடர்பு
இவர் மீதிருக்கும் விமர்சனங்கள் பல. அதில் மிக முக்கியமானவையாக இரண்டு இருக்கின்றன. ஒன்று, இவர் ஆர் எஸ் எஸ்-ன் வழியில் வந்தவர் என்று விமர்சிக்கப்படுகிறது. ஆர் எஸ் எஸ் அமைப்புக்கு என உறுப்பினர் பதிவு அட்டைகள் எல்லாம் எதுவும் கிடையாது. எனவே அதில் உறுப்பினர் என்றும், இல்லை என்றும் ஈஸியாக சொல்லிவிட்டு கடந்து போய்விட முடியும்.
கடந்த 1980களில் தன்கர், கமலேஷ் சிங் என்பவருடன் இணைந்து 'அதிவக்தா சங்கம்' எனும் வழக்கறிஞர் அமைப்பை உருவாக்குகிறார். கமலேஷ் சிங் என்பவர் ஆர்எஸ்எஸ் ஆர்வலர். இதன் பின்னர் 2019ல் புஷ்கரில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பவத்தை சந்திக்கிறார். அதன் பின்னர் தன்கருக்கு ஆர்எஸ்எஸ் தொடர்புகள் அதிகரித்ததாக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
காந்தியை கொன்ற கோட்சே ஆர் எஸ் எஸ் அமைப்புடன் தொடர்புபடுத்தி காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் விமர்சிப்பதால், இயல்பாகவே தன்கர் மீதான விமர்சனங்கள் அதிகம் இருந்தன.
அரசியலமைப்பு சட்டமும் தன்கரும்
இரண்டாவது முக்கியமான விமர்சனம், அரசியலமைப்பு சட்டம் குறித்த தன்கரின் பார்வைதான். அதாவது இந்தியாவின் அடித்தளம் அரசியலமைப்பு சட்டம்தான் என்று நாடே சொல்கிறது. ஆனால் தன்கர் சனாதனம்தான் இந்தியாவின் அடிப்படை என்று கூறி சலசலப்பை கிளப்பியிருந்தார். கடந்த மார்ச் மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆன்மிக மற்றும் மதத் தலைவரான ஸ்ரீலபிரபுபாதாவின் 150வது பிறந்த தின நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த அவர் சனாதனம் குறித்து பேசியிருந்தார்.
தன்கரும் சனாதனமும்
"சனாதனம் என்பது அனைவரையும் உள்ளடக்கியதாகும். இது சாதி, மதம், பொருளாதார பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. இந்தியாவின் அடித்தளம் இதுதான்" என்று கூறியிருந்தார்.
இதோடு நிற்கவில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142ஐயும் கடுமையாக விமர்சித்தார். அதாவது தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியது. இந்த 142வது சட்டப்பிரிவை ஜனநாயகத்திற்கு எதிரான அணுகுண்டு என்று தன்கர் விமர்சித்திருந்தார்.
ஜனநாயகத்திற்கு எதிரான அணுகுண்டு
இந்த வழக்கில் நீதிமன்றமே மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்திருந்தது. மட்டுமல்லாது மாநில சட்டமன்றம் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்படும் என்றும், அது குடியரசுத் தலைவருக்கும் பொருந்தும் எனவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. மேலும் குடியரசுத் தலைவர் நடவடிக்கைகள் நீதிமன்றக் கண்காணிப்புக்கு உட்பட்டவை என்றும் தீர்ப்பில் தெரிவித்திருந்தது.
இதனை விமர்சித்திருந்த தன்கர், "நீங்கள் குடியரசுத் தலைவருக்கு உத்தரவிடக்கூடாது. அது ஜனநாயக முறையை கேள்விக்கு உள்ளாக்குகிறது. உச்சநீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரங்களை அளிக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142 என்பது ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணுகுண்டை போல இருக்கிறது. இது நீதிமன்றத்திற்கு 24*7 நேரமும் கிடைக்கும் ஆயுதம் போல இருக்கிறது" என்று கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தார்.
தன்கருக்கு எதிர்வினை
அவருக்கு எதிராக திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்வினையாற்றி இருந்தன. இருப்பினும் தன்கர் இந்த விஷயத்தை அவ்வளவு லேசில் விடவில்லை. நாடாளுமன்றம்தான் நாட்டின் உட்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பு என்று கூறி மீண்டும் சலசலப்பை கிளப்பியிருந்தார். ஆனால் அரசியலமைப்புதான் உயர்ந்து, அதை காப்பாற்றதான் நீதித்துறை, நிர்வாகத்துறை மற்றும் நாடாளுமன்றம் ஆகியவை இருக்கிறது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இதற்கு விளக்கமளித்திருந்தார்.
இப்படி தொடர்ச்சியான பஞ்சாயத்துகளை கிளப்பியிருந்த நிலையில், மத்திய அரசுக்கு எதிரான வழக்குகளில் நீதிமன்றம் சில கடுமையான நடவடிக்கைகயை எடுத்திருந்தது. இந்நிலையில்தான் தன்கர் ராஜினாமா செய்திருக்கிறார். அவரது ராஜினாமாவுக்கு நீதித்துறையின் எதிர்ப்பும் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications