அவர்கள் என்ன துறவிகளா? அரசியலில் ஆர்வம் காட்டும் கரப்பான் பூச்சி ஜனதா! வாங்சக் ரியாக்‌ஷன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கு அரசியலில் ஈடுபடும் லட்சியங்கள் இருப்பதாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சங் தெரிவித்துள்ளார். டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போதே இதை தான் மதிப்பிட்டதாகவும் வாங்சங் கூறியுள்ளார். அதேவேளையில், அரசியல் ஆர்வம் இருப்பது ஒன்றும் தவறு இல்லை என்றும் கூறியுள்ளார்.

இளைஞர்கள் அரசியல் கட்சி தொடங்குவதையோ, கட்சியில் இணைவதை பார்ப்பதையோ தான் விரும்புவதாகவும் வாங்சுங் கூறியுள்ளார். இது குறித்து பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வாங்சங் கூறியிருப்பதாவது:-

Wangchuk says CJP founders have political ambitions They are not saints

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வந்தவர்

அவர்களின் (கரப்பான் பூச்சி ஜனதா) ஆர்வங்களை பொறுத்தவரை அவர்களுக்கு அரசியலில் ஈடுபடும் ஆசை இருப்பதாக நான் நினைக்கிறேன். அதை நான் மிகவும் நெருக்கமாக இருந்து கவனித்துள்ளேன். அவர்களுக்கு அரசியலில் ஈடுபடும் ஆர்வம் நிச்சயம் உள்ளது என நம்புகிறேன். சொல்லப்போனால், அதில் எந்த தவறும் இல்லை. ஆனால், தங்களுக்கு அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இருப்பது பற்றி என்னிடம் அவர்கள் கூறவில்லை. அவர்களை பற்றிய எனது மதிப்பீடு அதுதான்.

தங்களுக்கு எதுவும் கிடைக்க வேண்டியது இல்லை என நினைக்கும் அளவுக்கு அவர்கள் துறவிகள் அல்ல. அவர்களுக்கு அரசியல் லட்சியங்கள் உறுதியாக உள்ளது. அதில் எந்தத் தவறும் இல்லை. நான் டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்களின் போராட்டத்தில் இணைந்த போது, ஆப்ஜித் தீப்கே ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வந்தவர் என பலர் என்னிடம் கூறினார்கள்.

மாணவர்கள் போராட்டமாகவே பார்த்தார்கள்

ஆனால் அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு அரசியல் கட்சியுடன் கடந்த காலத்தில் பணியாற்றியதில் எந்த தவறும் இல்லை. மாணவர்கள் இயக்கத்திற்கு எந்த ஒரு அரசியல் சாயமும் கரப்பான் பூச்சி ஜனதா கொடுத்துவிடக்கூடாது என்று நான் சொல்லிக்கொண்டே இருந்தேன். உங்களில் சிலருக்கு அரசியலில் ஈடுபடும் லட்சியம் இருக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை.

இளம் மற்றும் வளர்ந்து வரும் தலைவர்கள் உருவாகுவது நல்ல விஷயம். ஆனால், இந்த மேடையின் புனிதத்தன்மையைப் பாதுகாக்க வேண்டும். இந்த அமைப்பை நடுநிலையானதாகவும், அரசியலுக்கு அப்பாற்பட்டதாகவும், அழுத்தம் கொடுக்கும் ஒரு அமைப்பாகவே வைத்து இருக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, உங்களால் இன்னும் பலவற்றை சாதிக்க முடியும் என்று வலியுறுத்தினேன். டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தை மக்கள், மாணவர்கள் போராட்டமாக மட்டுமே பார்த்தார்கள். அதே வழியில் அதை தக்க வைத்துக்கொண்டர்கள் என்பதில் நான் மகிழ்ச்சி அடைந்தேன்" என்றார்.

லடாக்கை சேர்ந்த சமூக ஆர்வலர்

நீட் தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு ஆதரவாக லடாக்கை சேர்ந்த சமூக ஆர்வலர் வாங்சங் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

கரப்பான் பூச்சி ஜனதா நிறுவனர் ஆப்ஜித் தீப்கே மற்றும் சவுரவ் தாஸ், அஸ்தோஸ் ரங்கா ஆகியோரும் போராட்டத்தின் போது வாங்சங் உடன் நெருங்கி பணியாற்றினர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வாங்சங் 26 நாட்களுக்கு பின் மத்திய அமைச்சர்கள் கோரிக்கையை ஏற்று தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்தார். இதனை தொடர்ந்து சில நாட்களில் தர்மேந்திர பிரதான் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து கரப்பான் பூச்சி ஜனதாவினரும் போராட்டத்தை கைவிட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+