வக்பு கவுன்சிலை அபகரிக்க முயற்சி.. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்கூட! உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்
டெல்லி: வக்பு சட்டத்திற்கு எதிரான மனுக்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "வக்பு கவுன்சிலில் முஸ்லிம் அல்லாத 7 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். வக்பு கவுன்சிலை அபகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்கூட வக்பு சொத்துகள் தொடர்பான விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வக்பு சொத்துகளை பறிக்கும் நோக்கில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது" என்று மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கபில் சிபல் உள்ளிட்டோர் பரபரப்பு வாதங்களை வைத்தனர்.
வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் செய்து மத்திய அரசு அண்மையில் சட்டம் நிறைவேற்றியது. இந்த சட்டம் முஸ்லீம்களின் உரிமையை பறிக்கும் வகையில் இருப்பதாக கூறி பல்வேறு தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சுமார் 70க்கும் மேற்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கு முதலில் விசாரணைக்கு வந்தபோது புதிய வக்பு சட்டத்தின் கீழ் எந்தவொரு நடவடிக்கை அல்லது நியமனங்களையும் மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது, பலர் மனு தாக்கல் செய்திருந்தாலும் வக்பு சொத்து மீதான அரசு அதிகாரங்கள் குறித்துத் தாக்கல் செய்யப்பட்ட ஐந்து மனுக்கள் மட்டுமே விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. மத்திய அரசு தரப்பிலும் மனுதாரர்கள் சார்பிலும் காரசார வாதங்கள் நடைபெற்றன. பரபரப்பான வாதங்கள் நடைபெற்ற நிலையில், இந்த மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற வாதத்தின் போது மனுதரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களில் ஒருவரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்,அபிஷேக் சிங்வி பரபரப்பான வாதங்களை முன்வைத்தனர். அவர்கள் வாதிட்டதாவது:-
வக்பு என்பது மதசார்பற்ற செயல்முறைக்காக உருவாக்கப்படவில்லை. மாறாக மூஸ்லீம்கள் தங்கள் சொத்தை கடவுளுக்கு அர்ப்பணிக்கும் நடைமுறையாகும். வக்பு கவுன்சிலில் முஸ்லிம் அல்லாத 7 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். வக்பு கவுன்சிலை அபகரிக்க முயற்சிக்க மேற்கொள்ளப்படுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கூட வக்பு சொத்துகள் தொடர்பான விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்து மத அறக்கட்டளையிலும் ஒரு நபர் கூட முஸ்லிம் அல்லது இந்து அல்லாதவர் இல்லை"என்றார்.
அப்போது குறுக்கிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய், புத்த கயா பற்றி என்ன கூறுகிறார்கள்? அனைவரும் இந்துக்கள்தானே என்றார் . இதற்கு பதிலளித்த கபில் சிபல், இதை நீங்கள் கேட்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். இந்துக்களும் புத்தமதத்தவர்களுக்கும் ஒரே மாதிரியான வழிபாட்டு தலத்தை கொண்டவர்கள். இங்கு மசூதிகள்; இது மதச்சார்பற்றது அல்ல. எனவே கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முஸ்லிம் சொத்து" எண்றார்.
அபிஷேக்சிங்வி கூறுகையில், " நன்கொடை என்பது ஒவ்வொரு மதத்திலும் உள்ளது. 5 ஆண்டுகளாக இந்த மதத்தை தழுவுகிறீர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று எந்த மத அறக்கட்டளை கேட்கிறது" வாதிட்ட்டார்.
முன்னதாக, திருத்தப்பட்ட வக்பு சட்டத்துக்கு ஆதரவாக 1,332 பக்கம் கொண்ட பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு கடந்த மாதம் உச்ச நீதிமன்ரத்தில் தாக்கல் செய்தது.. மேலும் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்துக்கு நீதிமன்றம் முழு தடை விதிக்க முடியாது எனவும் தனது நிலைப்பாட்டை முன்வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications