தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நீட் ரத்து செய்யப்படும்.. காங்கிரஸ் அதிரடி வாக்குறுதி!
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நீட் தேர்வு இருக்காது என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்து இருக்கிறது.
Recommended Video

டெல்லி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்து இருக்கிறது.
டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த அறிக்கையை வெளியிட்டார்.
இந்த தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்ட 15 முக்கிய உறுப்பினர்கள் சேர்ந்து உருவாக்கி இருக்கிறார்கள்.

என்ன அறிக்கை
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் அந்த முறை ரத்து செய்யப்படும். யாருக்கு விருப்பம் இல்லையோ அங்கு நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.

நீட் இல்லை
தமிழகத்திலும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களில் அந்த முறையை நீக்கிவிடுவோம். நாடு முழுக்க நீட் தேர்வை நீக்க வேண்டும் என்றாலும் கூட, நீக்குவதற்கு தயாராக இருக்கிறோம்.

காரணம் என்ன
மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கை நீட் தேர்வு. மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் நீட் தேர்வு உள்ளது. நீட் தேர்வு மாணவர்கள் இடையே பாகுபாடு ஏற்படுத்துகிறது. இதை களைவதே சரியாக இருக்கும்.

தேர்வு என்ன
நீட் தேர்விற்கு பதிலாக மாநில அளவில் தேர்வுகள் நடத்த வேண்டும் என்றால் நடத்திக் கொள்ளலாம். மாநிலத்தின் விருப்பப்படி மருத்துவ மாணவர்கள் தேர்வு நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்து இருக்கிறார்.

இருக்காது
ராகுல் காந்தியின் இந்த அறிவிப்பிற்கு பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக நீட் தேர்வை எதிர்க்கும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த அறிக்கை பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது.
-
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications